உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149

12. புத்தகுரு தோற்றபின் நிகழ்ந்தவை

இவ்வளவிற் புத்தகுருவுக்கும் திருவாதவூரடிகட்கும் நடந்த எதிர்முக வழக்கு முடிந்தது,. தமது புத்தக்கொள்கைகளை அளவைநூன் முறை வழுவாது அடிகள் நிரலே மறுத்துக் கூறியக்காலும், சைவசமய உண்மைகளை விரித்து

விளக்கியக்காலும் மாறுசொல்ல மாட்டாது அவற்றின் உண்மைகண்டு வாய்வாளாதிருந்த அப் புத்தகுரு தாமுந் தம்மதமுந் தோல்வியுற்றதனால் உண்டாய இழிவுபொறாது, நூல்வரம்புக்கு அடங்காத பொருந்தா வழக்குகளையும் கொடுஞ் சொற்களையும் உரத்த குரலால் வெகுண்டுரைத்துக் கூவ, அடிகள் அவரது அ செருக்கையடக்கித் தெளிவு பிறப்பித்தற் பொருட்டு ‘நீர் பேசும் வலியிழந்து ஊமையாகுக என்று கட்டளையிட்டார். எல்லாம் வல்ல சிவபிரான் திருவருள் வழிநின்று அடிகள் பணித்தபடியே, அப்புத்தகுரு பேசும் வலியிழந்து ஊமை ஆயினார். அதுகண்டு அவ் அவைக் களத்திருந்தார் அனைவரும் அச்சமும் வியப்புங் கலந்து மீதூரப்பெற்ற உள்ளத்தினராய், அடிகளது தவப்பெருமை யினையும் அவரை யாட்கொண்ட சிவபிரான் திருவருளையும் வியந்து செயலற்றிருந்தனர். அப்பொழுது, அப் புத்தகுரு வினோடு உடன் போந்த இலங்கை மன்னன் எழுந்துநின்று அடிகளை வணங்கிப், “பெருமானே! ஊமையைாய் இருக்கும் என்மகள் ஊமைத்தீர்ந்து, எம் புத்தகுருமார் நிகழ்த்துந் தடைகட்கெல்லாம் விடைகூறிச், சிவபெருமானே முழுமுதற் கடவுளென்று நிலைநிறுத்துமாறு திருவுளம்பற்றி யருள்க என்று வேண்டினான். அடிகளும் சிவபிரான் திருவருளை நினைந்து, அவன் அவன் வேண்டு வேண்டு கோட்கிணங்கி ஊமையா யிருக்கும் அப் பெண்மகளை அவ் அவைக்களத்தே வருவித்து

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/182&oldid=1587629" இலிருந்து மீள்விக்கப்பட்டது