உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மறைமலையம் - 22

இருத்தி, "நங்காய்! நீ ஊமை நீங்கி, இப் புத்த குருவின் மாணாக்கர் வினவும் வினாக்கட்கெல்லாம் ஏற்றவிடைகள் கூறி, நம் சிவபிரான்றன் முழுமுதற்றன்மையை நன்கு விளக்கி நிலைநிறுத்தக்கடவாய்!" என்று பணித்தருளினார். அங்ஙனம் அடிகள் பணித்தவளவிலே, அவ்வரசன் புதல்வி பிறவி முதற் றனக்கிருந்த ஊமைநீங்கிப், பேசும் ஆற்றலும் பேரறிவும் வரப்பெற்றாள். அடிகள் பணித்தவாறே பேசும் ஆற்றலிழந்து ஊமையாய் ஒடுங்கியிருக்கும் அப் புத்தகுருவின் பக்கத்தே யிருந்த அவர் தம் மாணாக்கர் இருபது பெயர் தம் ஆசிரியன் பேசமாட்டாதிருத்தல் கண்டு தாமே ஒருவர்பின் ஒருவராய்த், தம் மன்னன் புதல்வியை நோக்கி இருபது னாக்கள் நிகழ்த்தினார். அவர் நிகழ்த்திய அவ்வினாக்கட் கெல்லாம் அந் நங்கையார் மிகவும் பொருத்தமான விடை களைப் பேரறிவோடும் எடுத்துக் கூறினார். அவற்றை அங்கிருந்தா ரெல்லாரும் கேட்டுப் பிறவிமுதல் ஊமையாய்க் கல்வி கல்லாதிருந்த அம் மடந்தை, அடிகள் பணித்தவளவிலே ஊமை தீர்ந்து சிவபிரான் முழுமுதற் றன்மையை நன்கு விளக்கிக்காட்டியது, எல்லாம்வல்ல ல அப்பெருமானது அருட்டிறமும், அதற்கு இடனாய்நிற்கும் அடிகளது பேரன்பின் றிறமும் அல்லாமற் பிறிதன்றெனத் தெளியவுணர்ந்து அடிகளையும் ஐயனையும் வியந்து மகிழ்ந்து வாழ்த்திப் பேரன்பின் வழியரானார். இலங்கை மன்னன் தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பேரன்பால் ஈரக்கப்பட்டுச் சென்று மாணிக்கவாசகப் பெருமான் திருவடிகளில் வீழ்ந்து அழுது “தீவினையேனை அடிமைகொண்டருள்க! எம்பெரு மானே!' என்று குறையிரக்க, அடிகள் உளம் இரங்கி அவற்குத் திறுநீறு அளித்து அவனைச் சிவபிரான் திருவடிக்கு ஆளாக்கினார். அரசன் அவ்வாறானபின், அப் புத்தகுருவின் மாணாக்கரும் அடிகளை வணங்கித் திருநீறு பெற்றுச் சைவசமயந் தழீஇயினார். அதன்பின்னர் அம் மன்னனும் அம் மாணாக்கரும் தம் குருவின் ஊமைதீர்த்து அவரையும் அடிமை கொண்டருளல் வேண்டுமென அடிகளைப் பெரி பெரிதுங் குறையிரப்ப, அதற்குந் திருவுளம் இசைந்து அப்புத்தகுருவும் ஊமைதீர்ந்து மீண்டும் பேசுமாற்றல் பெறக் கற்பித்தருளினார். தமக்குவந்த ஊமைத்தன்மை நீங்கப் பெற்றவுடன் அப் புத்தகுருவும் உளந்திருந்தி அடிகளை வணங்கித் திருநீறுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/183&oldid=1587630" இலிருந்து மீள்விக்கப்பட்டது