உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மறைமலையம் 22

மாணிக்கவாசகப் பெருமான் அங்ஙனஞ் செக்கிலிட்டு அரைப்பித்துக் கொடுங்கொலை செய்தற்கு ஒருப்படுவரோ! அற்றேற், சைவசமயத் தலைவரான திருஞானசம்பந்தப் பருமான் தம்மொடு வழக்கிட்டுத் தோற்ற சமணக் குருக் கண்மாரைக் கூன்பாண்டியன் கழுவிலேற்றுவித்தற்கு ஏவிய காலையில், அதனை அவர் விலக்காதிருந்தது என்னையெனில்; அப்பாண்டியமன்னன் மனைவியாரான மங்கையர்க் பல்லாயிரம்

கரசியாரது வேண்டுகோளுக்கிணங்கிப் அடியார் திருக்கூட்டத்தோடும் மதுரைமாநகர்க்கு எழுந்தருளி, ஆண்டிருந்த சமணர்க்கு ஏ ஏதொரு தாரு தீதும் நினையாது, சிவபிரானை வணங்கிக்கொண்டு வாளாது வைகிய தம்மையும் தம் அடியார் பல்லாயிரவரையும் அச் சமணர் ஓர் இரவில் தீயிட்டுக் கொளுத்தின கொடுங்குற்றத்தை நினைந்து, திருஞான சம்பந்தப் பிள்ளையார் அரசியல் முறை வழுவாது பாண்டியன் அச் சமணரை ஒறுக்கப்புக்க அதனை விலக்காராயினார். அஃதொக்குமாயினும், தமக்குப் பெருந்தீங்கு இழைத்தாரையும் அருளொழுக்கத்தில் மிக்கார் ஒறாது விடுதலன்றோ செயற்பாலதெனின்; தம் ஒருவர்க்கு மட்டுந் தீங்கியற்றினராயின் அவரை ஒறாது விடுதல் சால்பேயாம்; தம்முடன் போந்த குற்றமற்ற பல்லாயிரஞ் சிவனடியா ருயிரைக் கொள்ளை கொள்ளுங் கொடிய கொலைச் செயலைப் புரிந்தாரைத் தாம் மன்னித்துவிடுதல் அருள் அன்றாம்; அதனாற் பிள்ளையார் பாண்டியனை விலக்காதிருந்தது அவர்க்கு ஒருவாற்றானுங் குற்றமாகாது. மற்றுத், தில்லைமா நகர்க்குவந்த புத்தரோ சைவர்க்கு ஏதொரு தீங்கும் இழைத்த தில்லாமையால், வெறுங் கொள்கையளவில் தோற்றதே பற்றிச் சோழன் அவரைச் செக்கிலிட்டு அரைப்பித்தானென்றலும் அதற்கு மாணிக்க வாசக அடிகள் உடன்பட்டிருந்தாரென்றலும் அரசியன் முறையும் அன்று, அருளொழுக்க முறையும் அன்று. இம் முறைகளையெல்லாம் ஒரு சிறிதும் ஆய்ந்து பாராமல், திருஞானசம்பந்தப் பிள்ளையாரொடு வழக்கிட்டுத் தோற்ற சமணர்கள் கழுவில் இடப்பட்டதற்கு ஒப்பாக, அடிகளொடு வழக்கிட்டுத் தோற்ற புத்தரும் செக்கிலிட்டு அரைக்கப்பட்டார் என்று சொல்லுதலொன்றுக்கே விழைந்து பரஞ்சோதி முனிவர் அங்ஙனம் ஒரு பொய்க்கதை கட்டிவிட்டார். இப் பெற்றிப்பட்டதொரு நிகழ்ச்சி திருவாதவூரடிகள் புராணத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/185&oldid=1587632" இலிருந்து மீள்விக்கப்பட்டது