உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153

ப்

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -1 18 திலாதல், பழைய நூலாகிய பெரும் பற்றப்புலியூர் நம்பி திருவிளையாடற் புராணத்திலாதல் காணப்படாமையின் பொய்க்கதை பரஞ்சோதி முனிவரே கட்டிவிட்ட தென்பது ஒருதலை. இங்ஙனமே பரஞ்சோதி முனிவர் ஆராயாது கூறினவும், தாமே கட்டிவிட்டனவும் மிகப்பல; அவையெல்லாம் ஈண்டு எடுத்துக்காட்டலுறின் இது விரியுமென அஞ்சி விடுத்தாம். அது நிற்க.

அப்

இனிப், புத்தகுருவுக்கும் அடிகட்கும் வழக்கு நிகழ்ந்த காலையில், அப் புத்தகுரு புத்தகுரு தம்முடைய L ய புத்தசமயக் கொள்கைகளாக எடுத்துக்கூறியவை எவையென்பதும், அவை தம்மைத் திருவாதவூரடிகள் மறுத்துக் கூறியது எவ்வெவ்வாறு என்பதும் பழைய நூலாகிய பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவிளையாட லில் ஒரு சிறிதுங் கூறப்படாமையின், திருவாதவூரடிகள் புராணத்திற் சொல்லப்பட்டபடியே அவை நடத்திருக்குமோ என ஓர் ஐயுறவு தோன்றாநிற்கும். மெய்கண்ட தேவநாயனார் அருளிச்செய்த சைவ சித்தாந்த முதல்நூலாகிய சிவஞானபோதத்திற்கு வழி நூலாக அருணந்திதேவர் இயற்றியருளின சிவஞானசித்தியார் பரபக்கத்திற் சொல்லப்பட்ட சௌத்திராந்திக புத்தன் மதத்தையும் அதன் மறுப்பையும் பெரும்பாலுந் தழுவியே திருவாதவூரர் புராணங் கூறிச் செல்லுதலை உற்று நோக்குமிடத்துத், திருவாதவூரர் புராணம் அவ்விரண்டும் அவ்விருவர்க்கும் இடைநிகழ்ந்தபடி தானாகவே அறிந்தெடுத்துக் கூறுகின்றதெனக் கொள்ளுதற்கு இடமில்லை. என்றாலும், இற்றைக்கு எழுநூறு ஆண்டுகட்கு முற்பட்டதாகிய சிவஞானசித்தியாரிற் காணப்பட்ட படியாகவேதான் அப் புத்த குருவுக்கும் மாணிக்கவாசகப் பெருமானுக்கும் எதிர்முகவழக்கு நடைபெற்றிருக்க வேண்டு மென்று நம்புதற்கு இடம் உளது. யாங்ஙன மெனிற் சிவஞான சித்தியாரிற் சொல்லப்பட்டபடியாகவே பழையநாளி லிருந்த சௌத்திராந்திக புத்தமதக் கொள்கைகள் வழங்கின வென்பது, பாளி மொழியிலும் வடமொழியிலும் உள்ள அப் புத்தசமய நூல்களையாம் ஆராய்ந்து பார்த்தமையால் நன்கு விளங்கின மையானும், மாணிக்கவாசகப் பெருமான் சைவசித்தாந்தக் காள்கைகளே முற்றும் உடைய ரென்பது அவர் அருளிச் செய்த ‘திருவாசகம்', 'திருக்கோவையார்' என்னும் நூல்களி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/186&oldid=1587633" இலிருந்து மீள்விக்கப்பட்டது