உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

மறைமலையம் - 22

லிருந்து யாம் திரட்டியெடுத்து மேலே காட்டிய மேற்கோள் களைச் சைவசித்தாந்தத் தெளிபொருள் நூல்களாகிய திருமூலர் திருமந்திரம்', 'சிவஞானபோதம்', 'சிவஞான சித்தியார்' என்பவற்றின் பொருள்களோடு ஒப்பவைத்து நோக்கு மாற்றால் தெற்றென விளங்குதலின், அங்ஙனஞ் சைவ சித்தாந்தக் கொள்கையுடைய அடிகள் மேற்காட்டிய புத்த சமயக் கொள்கைகளை மறுக்கும் முறை சிவஞானசித்தியார் பரபக்கத்தில் மறுக்கும் முறையாக வன்றி வேறொரு வாற்றான் ஆதல் இயலாமையானும் அவ்வாறு கொள்ளு தல் பொருத்தமேயா மென்று துணியப்படும்.

இனி, மேற்காட்டிய புத்தமதக் கொள்கைகள் பழைய புத்தசமய நூல்களில் உளவாதல் காட்டுதும்: புத்த மதத்தைப் புதிது தோற்றுவித்த முதலாசிரியரான களதம் சாக்கியர்க்கும், அவரைப் பின்பற்றிவந்த ஏனோர்க்குங் கொள்கை யளவில் வேறுபாடு மிகுதியாய்க் காணப்படுகின்றது. கௌதசாக்கியர் கொண்ட கொள்கையை இனிது விளக்குதற் பொருட்டுப், புத்தசமயத்தின் பழைய வேதங்களாகிய பிடக நூல்களில் தீகநிகாயத்தின் தேவிச் சசுத்தத்தில் வாசெட்டன் என்னும் பார்ப்பனனுக்குக் கௌதம சாக்கியர் செவியறி வுறுத்திய அறிவுரைப் பகுதியை இங்கே மொழி பெயர்த் தெழுது கின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/187&oldid=1587634" இலிருந்து மீள்விக்கப்பட்டது