உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155

13. சமயக் கொள்கைகள் ஆராய்ச்சி

இரபிதி யாற்றங்கரையில் மனசாகடம் என்னும் இனியதோர் இடத்திற், செல்வத்தாற் சிறந்து புகழ்பெற்ற பார்ப்பனர் பலர் இருந்தனர். அவ்விடத்தைச் சுற்றிலும் வேலிகள் இட்டு அடைப்பாக்கி, அதனுள் தாம் இருத்தற்குப் பல குடில்கள் அமைத்து, அவர்கள் ஒருங்குகூடித் தம் வேத மந்திரங்களைப் பாராயணஞ் செய்தல் வழக்கமாய் நடந்து வந்தது.வாசெட்டன்,பாரத்துவாசன் எனப் பெயரிய பார்ப்பன இளைஞர் இருவர் நாள்முழுவதும் அவற்றைப் பாராயணஞ் செய்து உருவேற்றிய பின் மாலைக் காலத்தில் அவ் யாற்றுக்குப் போய்த் தலைமுழுகி அதன் பின் அவ்வியாற்றங்கரை மணலில் அங்குமிங்குமாய் உலவுவர். ஒருநாள் அவர் அங்ஙனம் உலவுகையில், ஆழ்ந்த நினைவுடையராய் ‘எது மெய்யான வழி? எது பொய்யான வழி?' என்று தமக்குள் உசாவலாயினர். அவ்விருவருந் தாந்தாம் அறிந்த பார்ப்பன மறை ஆசிரியரை மேற் கோளாகக் காட்டி உரையாடியும், ஒருவர்க்கும் உறுதி பிறக்கவில்லை. ஆகவே, வாசெட்டன் மற்றவனை நோக்கிக் கூறுவான்: "பாரத்துவாச! சாக்கியகுலத்திற் பிறந்த சமண கோதமர் என்பார் அக்குலத்தை நீங்கிப் போய்த் துற வொழுக்கம் பூண்டார். அவர் இப்போது மன சாகடத்திற்குத் தெற்கே யாற்றங்கரையில் உள்ள மாந்தோப்பில் வந்து தங்கியிருக்கின்றார். மாட்சிமை தங்கிய அக்கோதமரைப்பற்றி எங்கும் பெரும்புகழ் பரம்பியிருக்கின்றது. அவர் முழுதும் அறிவுவிளங்கி இம்மையிலேயே வீடு பெற்றவரென்றும், மெய்யுணர்ச்சியினும் நன்மையினும் மிக்கவரென்றும், மேலுலகங்களின் நிகழ்ச்சிகளை அறிந்து பேரின்பத்தில் வைகியிருக்கும் புத்தர் என்றும் பாராட்டிப் பேசப்படுகின்றார். ஆதலாற், பாரத்துவாச! வருக, நாம் அச் சமணகோதமர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/188&oldid=1587635" இலிருந்து மீள்விக்கப்பட்டது