உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

மறைமலையம் - 22

சன்று

இருக்கும் இடத்திற்குச் செல்வம்

அவர்பால்

இதைப்பற்றி உசாவுவம்; அவர் நமக்கு அறிவுறுத்துவதை நாம் நமது கருத்தில் இருத்தக் கடவம்.'

அங்ஙனமே அவர்கள் அவர்பாற் சென்று தமக்கு நேர்ந்த இடர்ப்பாட்டை அறிவிக்கலாயினர். அவர் அவர் அவர்கள் கூறியவற்றை உற்றுக்கேட்டு, அவ்விருவர் உரையும் நூற் கருத்துகளைச் சார்ந்திருத்தல் கண்டு, அவ்விருவர் தமக்குள் உண்டான கருத்து வேறுபாட்டையும் வழக்கையும் எடுத்துச் சொல்லும்படி கேட்டார். வாசெட்டன் உரைப்பான்:

6

"கோதமரே! ஓர் ஊர்க்கேனும் நகரத்திற்கேனும் அருகிற் பல்வேறு வழிகள் உள்ளனவாயினும், அவ்வழிகளெல்லாம் அவ்வூரின்கண் வந்து ஒருங்கு கூடுதல்போல, அத்தரிய பிராமணங்கள், மித்திரிய பிராமணங்கள் சந்தோக பிராமணங் கள் சந்தவ பிராமணங்கள், பிரமசரிய பிராமணங்கள் என்னும் பல்வேறு பிராமணங்களால் அறிவுறுத்தப்பட்ட பல்வேறு வழிகளும் இருக்கின்றன. இவையெல்லாம் வீடு பயக்கும் வழிகளா? அவை, தம்முட் கூறியபடி ஒழுகுபவனைப் பிரமத்தோடு ஒன்று கூட்டும் வழிகள் தாமா?”

“வாசெட்ட! அவை யெல்லாந் தவறாமற் செலுத்து மென்று நீ சொல்லுகின்றனையா?" நீ என்று கோதமர்

வினாயினார்.

"கோதமரே! யான் அங்ஙனந்தான் சொல்கின்றேன்.”

"அங்ஙனமாயின், வாசெட்ட! மூன்று வேதங்களிலும் வல்லரான பார்ப்பனருள்ளேனும், அல்லாதவர் மாணாக்கருள் ளேனும், அல்லதவர் ஆசிரியருள்ளேனும், அல்லாதவர் கால்வழியில் ஏழாந் தலைமுறைவரை வந்தவருள்ளேனும், பிரமத்தை எப்போதாயினும் நேர்க்குநேராகக் கண்டவர் எவராவது ஒருவர் உளரா?'

66

இல்லை” என்று இவை யெல்லாவற்றிற்கும் வாசெட்டன் விடைகூறினான்.

"நல்லது, வாசெட்ட! மூன்று வேதங்களிலும் வல்ல இப் பார்ப்பனர்க்கு உரிய முன்னோரான இருடிகளாவது, பாட்டுக்களை ஆக்கியோராவது, இவற்றை முற்காலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/189&oldid=1587636" இலிருந்து மீள்விக்கப்பட்டது