உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

――

18

157

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் இருத்த சொற்களின் முறைப்படியே வைத்து ஓதுவோரும் பாராயணஞ் செய்வோருமாவது, முன் ஓதப்பட்ட அல்லது பாராயணஞ் செய்யப்பட்ட முறைப்படியே இப்போது அவை தம்மைத் திருத்தமாக ஓதுவோரான அல்லது பாராயணஞ் செய்வோரான பார்ப்பனராவது, 'பிரமம் எங்கே உளது, பிரமம் எங்கிருந்து வருகிறது, எங்கே செல்லுகிறது என யாம் அதனை அறிவோம், யாம் அதனைப் பார்த்திருக்கிறேம்’ என்று இங்ஙனஞ் சொல்லி யிருக்கின்றனரா?”

"கோதமரே! அங்ஙனஞ் சொல்லவில்லை.’

66

அங்ஙனமாயின், வாசெட்டனே! ஏழு தலைமுறை வரையில் ஒரு பார்ப்பனனாவது பிரமத்தை நேருக்கு நேர் என்றுங் கண்டதில்லையென நீயே சொல்லுகின்றனை. பண்டை நாளிலிருந்த இருடிகளேனும், தொன்றுதொட்டு வருகிற முறைப்படியே இஞ்ஞான்றுள்ள பார்ப்பனருந் தவறாமல் ஓதியும் பாராயணஞ் செய்தும் வருகிற அப்பழைய மந்திரமொழிகளை உரைப்போரேனும் ஆக்கினோரேனுங் கூடப் பிரமம் எங்குளது எங்கிருந்து வருகிறது. எங்கே செல்லுகிறதெனத் தாம் பார்த்ததாகவாதல் அறிந்ததாகவாதல் கூறவில்லை என்கின்றாய். ஆதலினாற்றான்,

மூன்று

வேதங்களிலும் வல்ல பார்ப்பனர் ‘நாம் அதனைப் பார்ப்பதும் இல்லை, அறிந்ததும் இல்லை, ஆகவே, அதனோடு ஒன்று கூடி யிருத்தற்குரிய வழியையும் நம்மாற் காட்டல் இயலாது!” என்று உண்மையைச் சொல்லிவிட்டார்கள்.

வாசெட்டனே!

ருவரையொருவர்பற்றி நிற்கும் ஒரு கோவையான குருடருள் முதல் நிற்பவரும் ஒன்றனைப் பார்க்க மாட்டுவாரல்லர், இடை நிற்பவரும் அதனைப் பார்க்கமாட்டுவாரல்லர், கடைநிற்பவரும் அதனைப் பார்க்கமாட்டுவாரல்லர்; அங்ஙனமே வாசெட்டனே! மூன்று வேதங்களிலும் வல்லுநராயினும் பார்ப்பனர் கூறும் உரைகளுங் குருட்டு உரைகளாகவே இருக்கின்றன. முன்னோரும் அதனைக் காணவில்லை, அவர்தம் ஆசிரியரும் அதனைக் காணவில்லை, அவர்தம் மாணாக்கருங் காணவில்லை. ஆகவே, மூன்று வேதங்களிலும் வல்லுநரான இப் பார்ப்பனர்தம் உரை நகைப்புக் கிடமான வெறுஞ் சொற்களாய்ப், பொருளற்ற வீண் உரைகளாய் முடிகின்றன!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/190&oldid=1587637" இலிருந்து மீள்விக்கப்பட்டது