உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மறைமலையம் - 22

கௌதமர் கூறிய இவ் வுண்மைமொழிகளைக் கேட்ட வாசெட்டன், ஞாயிற்றிலுந் திங்களிலும் உள்ள கடவுளோடு ன்றியைந்து நிற்றற்குரிய நெறியைப் பார்ப்பனர் காட்டவல்லுநர் அல்லரென ஒத்துக்கொண்டான். அவ்வாற்றவன் ஒத்துக்கொண்ட பின் கௌதமர் பின்னும் அவனை உசாவுவார்:

“வாசெட்டனே! ஒருவன் யான் 'இந்நிலவுலகின்கண் நிகரற்ற அழகுடையளான ஒரு நங்கையை எவ்வளவு காதலிக்கின்றேன் எவ்வளவு விழைகின்றேன்' என்று உரைக்கக், குடிமக்கள் அவனை நோக்கி, “நல்லது நண்பனே! நீ அங்ஙனங் காதலித்து விழையும் இந் நிலத்தில் நிகரற்ற அழகியாள் ஓர் அரசியோ, அல்லதொரு பார்ப்பனியோ, அல்லதொரு வணிகமாதோ, அல்லதொரு தொழுத்தையோ அறிவையா?” என்று வினாவ, அவன் அதற்கு 'இல்லை' என்றுரைப்ப, மேலும் அக்குடிமக்கள் அவனை நோக்கி, 'நல்லது இனிய நேசனே! இந் நிலவுலகத்திற் பேரழகியாய் நின்னால் விரும்பிக் காதலிக்கப் படும் அம்மாதின் பெயராவது, அல்லது அவள் குடும்பப் பெயராவது நீ அறிவையா? அல்லது அவள் உயரமா, குள்ளமா, கறுப்பா நடுத்தரநிறமா, எந்த ஊரில், அல்லது எந்தப் பட்டினத்தில், அல்லது எந்த நகரத்தில் உறைபவள்?” என்று கேட்க அவற்றிற்கெல்லாம் அவன் விடைகூறப், பின்னும் அம் மக்கள் அவனை நோக்கி, அப்படியானால், நல்ல நண்பனே! நீ அறியாத அல்லது காணாத அந் நங்கையையோ நீ காதலிப்பதூஉம் விழைவதூஉம்? என்று வினாவ, அதற்கும் அவன் ‘இல்லை' என்று விடுப்பனாயின், வாசெட்டனே; நீ யாது நினைக்கின்றாய்? அத்தகைய அவ்வாண்மகனது உரை அறிவற்ற மடவோனது உரையென்று முடிக்கப்படுமன்றோ?”

6

லலை’

6

என்று

"கோதமரே! உண்மையாகவே அஃது அப்படித்தான் ஆகும்," என்று வாசெட்டன் விடை நவின்றான். அதன்பிற் களதமர் வேறோர் உவமையும் எடுத்துக் காட்டும் தாடுத்துக்காட்டி மேலுங் கூறுவார்:

66

'மறுபடியும், வாசெட்டனே! இந்தப் பெரிய இரபிதியாறு நீர் நிரம்பிக் கரைபுரண்டு ஓட, அப்பக்கத்துக் கரையில் ஓர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/191&oldid=1587638" இலிருந்து மீள்விக்கப்பட்டது