உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

1

159

அலுவல் மேற் செல்லவேண்டுவான் ஒருவன் இப்பக்கத்துக்கரை மேல் வந்து நின்று எதிர்க்கரையை விளித்து எதிர்க்கரையே

ங்கே வா, இந்தக் கரைக்கு வா! என்று வேண்டினால், வாசெட்ட, இவ் விரபதியாற்றின் அந்தக் கரை அவ் வாண் மகனின் அழைப்புக்கும் வேண்டுகோளுக்கும் நம்பிக்கைக்கும், புகழ்ச்சியுரைக்கும் இணங்கி இந்தக் கரைக்கு வந்துவிடுமா, நீ யாது நினைக்கின்றாய்?”

“திண்ணமாய் வராது, கோதமரே!”

66

அங்ஙனமே, வாசெட்ட! மூன்று வேதங்களிலும் வல்லரேனும், ஒருவனை உண்மையாகவே பார்ப்பனன் ஆக்கும் உயர்ந்த தன்மைகளிற் பழகுதலைக் கைவிட்டு, மெய்யாகவே மக்களைப் பார்ப்பனராக்க மாட்டாத இழிந்தவைகளை விடாப்பிடியாய்க் கைக்கொண்டிருக்கும் இப் பார்ப்பனரும் இந்திரனே நின்னை வேண்டுகின்றேம், சோமனே வேண்டு கின்றேம் வருணனே வேண்டுகின்றேம், ஈசானனே வேண்டு கின்றேம், பிரஜாபதி வேண்டுகின்றேம், யமனே வேண்டுகின்றேம்! என்று கூறுகின்றார்கள். வாசெட்ட! மெய்யாகவே இப்பார்ப்பனர் தீமையைக் கைப்பற்றிக் கொண்டு, நன்மையைக் கைந்நெகிழவிட்டிருக்குங் காறும், கடவுளரை வேண்டுதலாலும் வழிபடுதலாலும் நம்புதலாலும் புகழ் தலாலும், இவ் வுடம்பு அழிந்துபோகும் சாக்காட்டிற்குப் பின் அவர்கள் பிரமத்தோடு ஒன்றாய்ப் போதல் கூடுமோ, அஃது உண்மையாகவே ஒருகாலத்தும் இல்லை.”

இவ்வாறே, ஐம்புல அவாக்களினும் இணைவிழைச்சினும் ஈடுபடுதலும், பகைமை மடி செருக்கு தன்னலம் ஐயம் என்னும் இவ்விழிந்த தன்மைகள் உடையராதலும் ஒருவர்க்கு உண்மையிலே விலங்குகளாயிருந்து தடை செய்வனவல்லால், அவை பிரமத்தோடு அவரை ஒன்று பொருத்தமாட்டா என்று பின்னும் பல உவமைகளாலும் வினாக்களாலும் அறிவுறுத்திக் களதமர் கூறுவார்:

“வாசெட்டனே! பார்ப்பனர் சினம் உடையராயும் அகத்தே பகைமை கொண்டவராயும் தீவினை யாளராயும் அடக்கமில்லாதவராயும் இருக்கின்றனரென நீயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/192&oldid=1587639" இலிருந்து மீள்விக்கப்பட்டது