உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

  • மறைமலையம் - 22

கூறுகின்றாய்; மற்றுப் பிரமமோ சினமும் பகைமையுந் தீவினையும் இல்லாது, அடக்கம் உடையது; இங்ஙனந் தம்முள் மாறுபட்ட இயற்கையுடைய பார்ப்பனருக்கும் பிரமத்திற்கும் தம்முள் ஒப்புமையும் ஒற்றுமையும் உண்டாதல் யாங்ஙனம்?”

66

உண்மையாகவே உண்டாதல் இல்லை, கோதமரே!”

'அங்ஙனமாயின், வாசெட்ட! இந்தப் பார்ப்பனர் தமது வேதவுணர்ச்சியில் நம்பிக்கையுடையராய் அமர்ந்திருக்கை யிலேயே, அவர்கள் மெய்யாகவே சேற்றுள் அமிழ்ந்திப் போகிறார்கள். அவ்வாறு அமிழ்ந்தியும், தாம் ஏதோ ஓர் இன்ப வுலகத்திற்குச் செல்வதாக நினைந்து, இறுதியில் மனத்தளர்ச்சி அடைகின்றார்கள். ஆதலினாற்றான் வேதங்களில் வல்ல அப் பார்ப்பனரின் மூவகைப்பட்ட உணர்ச்சியானது நீர் அற்ற பாலை நிலம் என்று சொல்லப்படுகின்றது. அவர்களின் அம்முத்திற உணர்ச்சி வழியற்ற காடு என்றும் புகலப்படு கின்றது. அவர்கள் தம் அம் முப்பாலுணர்ச்சி பெருங்கேடு என்றும் பகரப்படுகின்றது!

இச் சொற்களைக் கேட்ட வாசெட்ட சட்டன் மனம் நெகிழ்ந்தோனாய், ஆசிரியர் கௌதமர் தாமே, பிரமத்தோடு ஒன்றுபடும் நெறியைத் தனக்குக் காட்டல் கூடுமாவென்று கேட்க, அவரும் அது தன்னால் ஆகும் என்றுரைப்ப அவ்வாறே அதனைத் தனக்குக் காட்டும்படி மன்றாடி,“மாட்சிமை தங்கிய கேதமர் பார்ப்பன இனத்தைப் பாதுகாக்க!" என்று புகன்றான்.

அதற்கு ணங்கி முதலிற் கொல்லாமை யறத்தை வற்புறுத்துவராய், “ஓ வாசெட்டனே! உயிருள்ளவற்றைக் கொல்லுதலை நீக்கி, வீடுபேற்றை விரும்பினோன் எவ் வுயிரையும் அழிப்பான் அல்லன். அவன் கத்தியையும் தடியையும் அப்புறப் படுத்துகின்றான்; தூய்மையும் இரக்கமும் நிறைந்தோனாய், உயிருள்ள எல்லாவற்றினிடத்தும் அன்பும் உருக்கமும் வைத்து ஒழுகுகின்றான்," என்று உரைத்து, அதன்பிற் களவு, காமம், பொய், புறங்கூற்றுரை, இன்னாச் சொல், பயனில்சொல், என்றிவற்றது தீமையும், இவற்றுக் கெதிரிடையான நல்லவற்றின் நன்மையும் விரித்துரைக்க இறதியாக, "வாசெட்டனே! ஆர்வமுடையனாய், அன்பால் நிறைந்து, தூய உள்ளத்தோடுந் தன்னை அடங்கச் செய்யும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/193&oldid=1587640" இலிருந்து மீள்விக்கப்பட்டது