உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -1

161

அந்த ஆண்மகனே, இவ்வுடல் கெட்டு இறந்தபின் பிரமத்தோடு ஒன்றுகூடப் பெறுவானாதல் வேண்டும். அத்தகைய நிலை எவ்வாற்றானும் இயல்வதேயாம்!" என்று கோதமர் முடித்துக் கூறினார்.

இங்ஙனம்

போந்ததாகிய கௌதம சாக்கியரின் அறிவுரையை நடுநின்று நன்கு ஆராய்ந்து பார்க்குங்கால், அவருடைய கொள்கைகள் பழைய சைவசமயக் கொள்கை களோடு முழுதும் ஒத்துநிற்கக் காண்கின்றனமே யல்லாமல், அவற்றோடு மாறுபடுதலைச் சிறிதுங் காண்கின்றிலேம். இப்போது 'வேதங்கள்'என்னும் பெயரால் வழங்கப்படும் ஆரியரின் சிறு தெய்வப் பாட்டுகள் கெளதம சாக்கியர் இருந்த காலத்தில், அஃதாவது இற்றைக்கு இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன், மூன்றாகவே இருந்தனவன்றி நான்காக இருந்தன அல்ல வென்பதற்குக் கௌதமர் அவற்றைக் குறிக்கும் டங்களினெல்லாம் ‘மூன்று வேதங்கள்' என்று பேசுதலே சான்றாம். இது கொண்டு, பழைய செந்தமிழ் நூல்களிலும் பாட்டுகளிலும், இடைக்காலத்துத் ‘திருவாசகம்’, ‘திருமந்திரம்', 'தேவாரம்' முதலாக, ஒரு முழுமுதற் கடவுளை வலியுறுத்தும் நூல்களிலுங் குறித்து ஓதப்பட்ட நான்மறை என்பன, மேற் கூறப்பட்ட வணக்கப் பாட்டுகளான ஆரிய வேதங்களை ஓதுதலானும், அத் தெய்வங்கள் பொருட்டு யாடு மாடு எருமை குதிரை ஆண்மக்கள் என்பவற்றைக் கொன்று வேள்விகள் வேட்டலானும் முழுமுதற் கடவுளைத் தலைக்கூடியிருப்பதாகிய பேரின்பநிலை வாயாது; அருளொழுக்கமும் உண்மையன்பும் உடையார்க்கே அது வாய்ப்பதாகும் என்னுங் கொள்கை கௌதம சாக்கியர்க்கு உரியதாதல் போலவே, தமிழ்நாட்டின் கண் இருந்த திருவள்ளுவர், மாணிக்கவாசகர், திருமூலர், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரையர், சுந்தரமூர்த்திகள் முதலான சான்றோர்க்கும் உரியதாயிருக்கின்றது. இதற்கு,

“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று,"

“மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகும் மாந்தர் பலர்,’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/194&oldid=1587641" இலிருந்து மீள்விக்கப்பட்டது