உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

66

  • மறைமலையம் - 22

'ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்"

என்று திருவள்ளுவரும்,

“தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி முனிவி லாததோர் பொருளது கருதலும் ஆறு கோடி மாயா சக்திகள்

வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின, ஆத்த மானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்,

விரத பேர மாக வேதியரும்

சரத மாகவே சாத்திரங் காட்டினர்”

என்று மாணிக்கவாசகரும்,

“கொலையே களவுகட் காமம் பொய்கூறல்

மலைவான பாதகமா மவைநீக்கித்,

தலையாஞ் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்கு இலையாம் இவை, ஞானானந்தத் திருத்தலே”

“வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர் வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்”

“சத்தியம் இன்றித் தனிஞானந் தான் இன்றி ஒத்தவிடயம் விட்டு ஓரும் உணர்வின்றிப் பத்தியும் இன்றிப் பரன்உண்மை இன்றிஊன் பித்துஏறும் மூடர் பிராமணர்தாம் அன்றே”

என்று திருமூலரும்,

66

“வீடும் ஞானமும் வேண்டுதிரேல் விரதங்களால் வாடி ஞானம் என்னாவதும், எந்தை வலஞ்சுழி நாடி ஞானசம்பந்தன் செந்தமிழ் கொண்டு இசை பாடும் ஞானம்வல்லார் அடிசேர்வது ஞானமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/195&oldid=1587642" இலிருந்து மீள்விக்கப்பட்டது