உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1 என்று திருஞானசம்பந்தரும்

“வேதம் ஓதில்என் வேள்விகள் செய்கில்என் நீதி நூல்பல நித்தல் பயிற்றில் என் ஓதி அங்கம்ஓர் ஆறும் உணரில்என் ஈசனை உள்குவார்க் கன்றி இல்லையே”

“செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று பத்தி செய்மனப் பாறைகட்கு ஏறுமோ அத்தன் என்று அரியோடு பிரமனுந் துத்தி யஞ்செய நின்றநற் சோதியே”

என்று திருநாவுக்கரையரும்,

“குற்றொருவரைக் கூறைகொண்டு கொலைகள் சூழ்ந்த களவெலாம் செற்றொருவரைச் செய்ததீமைகள் இம்மை யேவருந் திண்ணமே

மற்றொருவரைப் பற்றிலேன் மறவாதெழு மடநெஞ்சமே புற்றரவுடைப் பெற்றமேறி

புறம்பயந்தொழப் போதுமே”

“பொய்யா நாவதனாற்

புகழ்வார்கண் மனத்தினுள்ளே மெய்யே நின்றெரியும்

விளக்கேயொத்த தேவர்பிரான்"

163

என்று சுந்தரமூர்த்திகளும் அருளிச்செய் திருத்தலே சான்றாம்.

இனி, ஆரியப் பார்ப்பனர் தாம் கொணர்ந்த சிறு தெய்வப் பாட்டுகளை 'வேதம்' எனுஞ் சொல்லால் உயர்த்துக் கூறி வழங்கலாயினது பற்றிச் சைவசமய ஆசிரியர்கள் அதனையுந் தழுவிக் கூறுவராயினும், அவ்வாரிய வேதங்களின் வேறாக அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களை யுணர்த்தும் தமிழ் நான் மறைகள் பிற உளவென்பதற்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/196&oldid=1587643" இலிருந்து மீள்விக்கப்பட்டது