உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

மறைமலையம்

"அங்கமாய் ஆதியாய் வேதம் ஆகி

அருமறையோ டைம்பூதந் தானேயாகி”

என்று திருநாவுக்கரசு அடிகளும்,

22

“பங்கமேறு மதிசேர் சடையார் விடையார் பலவேதம் அங்கம் ஆறும், மறைநான் கவையுமானார்”

என்று திருஞானசம்பந்தப் பிள்ளையாரும் ஆரியர்க்குரிய வேதம் என்பதனோடு 'மறை' என்பதனையும் உடன்வைத்து ஒதுதலே சான்றாம். ஆரிய வேதங்களை அங்ஙனந் தழுவி ஓது கின் ற விடத்தும் அவற்றுள் மந்திரம் பிராமணம் என்னும் இருபகுதியையும் விடுத்துத், தூய ஞானமாய் விளங்கும் உ ப நிடதங்களையே' தம் கருத்துட் கொண்டு ஓதுகின்றா ரென்பது தெளியற்பாற்று. ஏனெனின், மந்திரம் பிராமணம் என்னும் அவ் விருபகுதிகளிலும் இந்திரன் வருணன் முதலான சிறுதெய்வ வணக்கமும், அவை தமக்குச் செய்யும் வேள்வி முறைகளுமே பெரும்பாலும் நிரம்பிக் கிடத்தலிற், 'சிவம்' என்னும் பிறப்பு இறப்பில்லா முழுமுதற் கடவுள் ஒன்றையன்றிப் பிறிதெதனையுங் கனவினும் நினையாத சைவசமய ஆசிரியர் அச் சிறுதெய்வப் பாட்டுகளை உயர்த்துக் கூறாராகலானும், மற்றுப் பழைய உபநிடதங்கள் பன்னிரண்டுமோ மந்திரம் பிராமணம் என்னும் அவ் விரண்டையும் அவற்றுட் கூறிய தெய்வங்களையும் அவற்றிற்கு ஆற்றும் வழிபாடுகளையும் ‘அபரம்' எனக் கழித்துச் ‘சிவம்’ ஒன்றற்கே முழுமுதற்றன்மை கூறுதலின் அவை தம்மையே அவர் உயர்த்துக்கூற ஒருப்படுவராகலானும் என்பது. எனவே, திருக்குறள், திருவாசகம், திருமந்திரம், தேவாரம், சிவஞான போதம் முதலான செந்தமிழ் மறைநூல்கள் ஆரியமொழி வேதங்களைத் தழுவிக்கூறும் இடங்களிலெல்லாம் ‘வேதம்’ என்னுஞ் சொல்லுக்கு ‘உபநிடதம்' எனப் பொருள் கோடலே ஆ சிரியர் கருத்தாதல் தெளிக.

இனி, மந்திரப் பகுதியாய் உள்ள இருக்கு எசுர் சாமம் என்னும் வேதங்கள் இந்திரன் வருணன் முதலான சிறு தெய்வ வழிபாட்டினையே பெரும்பான்மையும் எடுத்துக் கூறுதலானும், அம் மந்திரப் பகுதிகட்கு உரையாய் விரிந்த பிராமணங்களும் அச் சிறுதெய்வங்கள் பொருட்டு வேட்கப்படுங் கொலையுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/197&oldid=1587644" இலிருந்து மீள்விக்கப்பட்டது