உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

166

மறைமலையம் - 22

தன்மையை எடுத்துப் பேசும் உரிமை தமக்கு இல்லையென அவர் நன்கு கண்டு தம்பால் அறவுரை கேட்கவந்தார்க் கெல்லாம் அவ்வுண்மையைக் கூறுதல்விட்டுத், தாம் நன்குணர்ந்த அறவொழுக்க வகையினையும் அதன் மேம்பாட் டினையுமே தெளிய விளக்கிப் பேசுவாராயினர். ஒருகால், மாலூங்கியா புத்தர் என்னுங் கௌதம மாணாக்கர் ஒருவர், 'உலகம் என்றும் உள்ளதா இல்லதா; உலகம் ஒரு வரம் புடைப்பொருளா, அஃது இல்லதா; உயிரும் உடலும் ஒன்றா, வேறா; இறந்த பின்னும் முனிவன் உளனா, இலனா; அல்லது அவன் உளனும் இலனுமா?” என்னும் வினாக்களுக்கு விடை கொடுத்து, அவற்றுள் இன்னவைதாம் உண்மையெனத் தம் ஆசிரியர் தம்மைத் தெளிய வைத்தில ரென்பது பற்றி மனக்கவற்சி மிகுதியும் உடையோராய், அவரையணுகித் தமக்கு அவற்றின் உண்மைத் தன்மையை அறிவுறுத்தும்படி வேண்ட அதற்குக் கௌதமசாக்கியர்,

"மாலூங்கியா

டை

புத்த! நீ என்னையடுத்துத் தவ

வொழுக்கத்தை நடத்து,

உனக்கு

வ்வுண்மைகளை அறிவுறுத்துவேன் என்று எப்போதாயினும் யான் உன்னிடம் சொன்னதுண்டா?” என விடைகூறி, அவரது வேண்டுகோளை மறுத்துப் பின்னும் பின்வருமாறு விளம்பினார்:

66

மாலூங்கியா புத்த! நன்றாக நஞ்சு ஊட்டிய அம்பினாற் புண்பட்டு வீழ்ந்த ஒருவன்பால், அவன் நண்பரும் தோழரும் உறவினருங் கேளிருந் தேடிச்சென்று ஒரு மருத்துவனைக் காண்டுவந்தக்கால், அவன் அம்மருத்துவனை நோக்கி ‘என்மேல் அம்பு எய்தவன் அரசனா, அல்லது பார்ப்பனனா, அல்லது வணிகனா, அன்றி உழவனா, அன்றி ஒரு தொழுத்தையா? அது தெரிந்தாலல்லாமல், என்னிலிருந்து அவ் அம்பினை எடுக்கவிடேன்’ என்றும்; அங்ஙனம் அவ் வம்பெய்தவன் பெயரும், அவனது வகுப்பும், அவன் உயரமா குள்ளமா நடுத்தரமா என்பதும், அவன் கறுப்பா மாநிறமா பொன்னிறமா என்பதும், அவன் இவ்வூரானா அவ்வூரானா நகரத்தானா பட்டினத்தானா என்பதும், அவ் அம்பு எய்த வில் சாபமா கோதண்டமா என்பதும், அவ் வில்லின் நாண் புல் மூங்கில் நரம்பு முதலியவற்றுள் எதனால் ஆக்கியது என்பதும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/199&oldid=1587646" இலிருந்து மீள்விக்கப்பட்டது