உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யான்

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

18

167

என்னைப் புண்படுத்தின அக் கணை கழுகு நாரை மயில் முதலியவற்றின் சிறகுகளுள் எதனால் இறக்கை அமைக்கப்பட்ட தென்பதும் பிறவும் தெரிந்தாலல்லாமல் என்னிலிருந்து அவ் வம்பினை எடுக்கவிடேன்' என்றுஞ் சொல்லிக் கொண்டிருப்பா னாயின், இவைகளைத் தெரிந்து கொள்வதற்கு முன்னரே நஞ்சு தலைக்கேறி அவன் இறந்துபோவானல்லனோ? இதைப் போலவே, மாலூங்கியா புத்தனே! ‘உலகம் என்றும் உள்ளதா இல்லதா, அஃது ஒரு வரம்புடைப் பொருளா அஃதில்லதா, உயிரும் உடலும் ஒன்றா வேறா, இறந்த பின்னும் முனிவன் உளனா இலனா என்பவற்றின் உண்மைகளைத் தெரிந்தாலன்றி, தவவொழுக்கத்தைச் செய்யமாட்டேன்' என்று சொல்லிக்கொண்டிருப்பவனும், ததாகதர் அவற்றை அவனுக்கு விளக்கிக் கூறுதற்குமுன், இறந்துபோவான். மாலூங்கியா புத்தனே! தவவொழுக்கமானது, 'உலகம் என்றும் உள்ளது, அன்றி இல்லது என்னுங் கொள்கையைச் சார்ந்து நிற்கவில்லை. பிறப்பும் முதுமையும் இறப்பும் துன்பமும் துயரமும் கவலையும் மனநோயும் மனத்தளர்வும் எங்குந் தங்கியிருக்கின்றன; அவற்றை இப் பிறவியிலேயே அவிப்பதற்கான முறைகளையே யான் வகுத்துரைக்கின்றேன். நீ கேட்டவைகளை யான் ஏன் விளக்க வில்லை யென்றால், அதனாற் போதரும் பயன் ஒன்றுமில்லை; மேலும், அது சமய உட்பொருளோடும் இயைபுடைத் தன்று; அதனால் உலக வாழ்க்கையில் வெறுப்பாவது, அவாவொடுக்க மாவது, அமைதியாவது, உயர்ந்த அகக்கருவி விளக்கமாவது, மெய்யுணர்ச்சியாவது, நிருவாணமாவது வரப்போவதுமில்லை; அதனாலேதான் யான் அதனை விளக்கிற்றிலேன்.. அற்றேற், பின்னை யாதுதான் விளக்கினேன் என்பையேல், துன்பம் இன்னதெனவும், அத் துன்பத்திற்கு முதல் இன்னதெனவும், அத் துன்பத்தின் அவிப்பு இன்னதெனவும், அதனை அவித்தற்குச் சலுத்தும் வழி இன்னதெனவும் விளக்கிக் காட்டி யிருக்கின்றேன்.'

இங்ஙனங்

கௌதமசாக்கியர் திறந்து

சொல்லிய

அறிவுரையை ஆராய்ந்துகாணுங்காற், கடவுளின் றிருவருளால் அவரை நேரே காணப்பெற்றார்க்கன்றி, ஏனையோருக்குக் கடவுளின் இயல்புகளைப்பற்றியும், அவராற் றோற்றுவிக்கப் பட்ட உலகம் உயிர் என்னும் இருவேறு இருவேறு வகைப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/200&oldid=1587647" இலிருந்து மீள்விக்கப்பட்டது