உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

தூயராக்கி

மறைமலையம் - 22

பொருள்களின் இயல்புகளைப் பற்றியும் உண்மையுணர்தல் ஏலாதாமென்பதூஉம், ஏலாதாகவும் அவரெல்லாந் தம்மைத் அமைந்தொழுகுதற்கேற்ற அறநெறியைக் கடைப்பிடித்தலே செயற்பாலதாமென்பதூஉம் இங்ஙனஞ் செயற்பாலதாகிய அறத்தைக் கைவிட்டு வறிதே அத்தகைய ஆராய்ச்சியுட் புகுந்து வாணாட்கழித்தல் வீணாமென்பதூஉம் நன்கு புலப்படா நிற்கும். அறவொழுக்கங்களில் வழுவா தொழுகி ஒருவன் தன்னைத் தூயனாக்கிக் காண்ட அளவானே, எல்லாம்வல்ல இறைவன் அவனுக்கு விளங்கித் தோன்றி அவனை அடிமைகொண்டருள்வனாதலால், அங்ஙனம் அவனருளைப் பெற்ற ஆன்றோர் மட்டுமே D அவனையும் அவன்றன் அருட்டிறத்தையும் பற்றிப் பிறர்க்கு எடுத்துரைக்கும் ஆற்றலும் உரிமையும் உடையராவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/201&oldid=1587648" இலிருந்து மீள்விக்கப்பட்டது