உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169

14. நால்வரே நல்லாசிரியர்கள்

அவ்வாறாயின், றைவனை நேரே கண்டு அவன் றிருவருளைப் பெற்று, அதனால் அவனுடைய அருட்பெருந் தன்மைகளை எடுத்துப்பேசும் உரிமை வாய்ந்தார் எவரென்று நடுநின்று உண்மையை உள்ளவாறு ஆராய்ந்து நுணுகி நோக்குங்கால், மாணிக்கவாசகப் பெருமான் திருஞானசம்பந்தப் பிள்ளையார் முதலான ஆசிரியன்மார் சிலரே முழுமுதற் கடவுளை நேரே காணும் பெரும்பேற்றையும் அவன் றன்மைகளைப் பிறர்க்கு எடுத்துரைக்கும் உரிமையையும் பெற்றோராவரென்பது புலப்படும். அங்ஙனமே, மற்றைச் சமயத்தவரும் தத்தம் சமய ஆசிரியர் கடவுளை நேரே ஆ கண்ட னரென எழுதி வைத்திருத்தலின் அவருள் எவர் கடவுளைக் கண்டவர் எவர் காணாதவர் எனத் துணிதல் கூடுமெனின்; பிறர் எழுதி வைத்த கதைகளைக் கொண்டு அவ்வாறு துணிதல் இயலாததேயாம். கடவுளை நேரே கண்ட சான்றோரைப்பற்றிய உண்மையான கதைகளும் வழங்குகின்றன; கடவுளைக் காணாத மற்றையோரும் கடவுளைக் கண்டதாகப் பொய்ப்பற்றினாற் பிறர் பொய்யாகக் கட்டிய கதைகளும் அவற்றோடு உடன் வழங்குகின்றன. இங்ஙனம் பொய்யும் மெய்யுங் கலந்து காணப்படுதலாற் பிறர் கூறுங் கதைகளைக் கொண்டு கடவுளைக் கண்டவர் இவர்தாம் என்று துணிந் துரைத்தல் கூடாததாயிருக்கின்றது. அஃது அவ்வாறாயினும், சான்றோர்கள் தாந் தாமே பாடியிருக்கும் பாட்டுக்களைக் கொண்டும், அவர் பிறர்க்குக் கூறிய கூறிய அறவுரைகளைக் கொண்டும் அவர்களுள் எவர் கடவுளைக் கண்டவர் எவர் காணாதவர் பகுத்துணர்ந் துரைத்தல் கூடும். பழையகாலத்திருந்த அருட்சான்றோர்கள் தாமே பாடிய பாட்டுகள் தமிழ் மொழியின்கண் இருத்தல்போல ஏனை

L

என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/202&oldid=1587649" இலிருந்து மீள்விக்கப்பட்டது