உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

மறைமலையம் 22

மொழிகளுட் பெரும்பாலும் இல்லை. நக்கீரர், மாணிக்க வாசகர், திருமூலர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரையர், சுந்தரமூர்த்திகள் முதலான அரும்பெருஞ் சான்றோர்கள் அருளிச்செய்த பாடல்களை நாம் நேரே காண்கின்றோம். ஆனாற் கெளதம சாக்கியர், ஏசுக்கிறித்து முதலிய பெரியோர் தாமே கூறிய சொற்களை நாம் நேரே காணவில்லை; களதமரும் ஏசுவும் கூறியனவாக அவர்தம் மாணாக்கரும் அவர் வழியில் வந்தாரும் எழுதிவைத்தவைகளையே யாம் காண்கின்றேம். இவ்வா றிவர்கள் எழுதிவைத்தவைகளை முற்றும் பொய்யென்று நாம் தள்ளாவிடினும், சான்றுகளாகக் கொள்ளுங்கால், மாணிக்கவாசகர் முதலான ஆசிரியன்மார் நேரே அருளிச் செய்திருக்கும் பாடல்களைப் பார்க்கினும், பிறர் எழுதிவைத்தவைகள் வலிகுறைந்தனவாகவே காணப்படு கின்றன. என்றாலும், கௌதம சாக்கியர், ஏசுக்கிறித்து முதலியோர் கூறியனவாக வழங்கிவரும் உரைகளையும் எடுத்துக் கொண்டு அவை தம்மை மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் முதலியோர் நேரே அருளிச்செய்திருக்குஞ் செழுந்தமிழ்ப் பாடல்களோடு வைத்து ஒத்து நோக்கி ஆராய்ந்திடுவமாயின் இவருள் எவர் கடவுளைக் கண்டவ ரென்னும் உண்மை நன்கு தெளிந்து கொள்ளப்படும். களதமசாக்கியர் தாம் கூறிய அறவுரைகளுள் எங்குந் தம் கடவுளைக் கண்டதாகக் க கூறவில்லை. ஏசுக்கிறித்து மேலுலகத்துள்ள என் தந்தை என்று கடவுளைக் குறித்துப் பலகாலும் பலவிடங்களிலும் பேசினாராயினும், தாம் அத் தந்தையை நேரே கண்டதாக எங்குங் கூறிற்றிலர். இனி, இருக்கு, எசுர் முதலான ஆரியவேதப் பாட்டுகளை இயற்றினோரான ஆரியக் குருமாரும் தாம் கடவுளைக் கண்டதாக யாண்டுங் கூறக் காணோம்; அவ்வரியக் குருமாரால் வணங்கப்பட்ட இந்திரன் வருணன் மாதரிஸ்வான் மாதரிஸ்வான் முதலான தேவர்களுங் கடவுளைக் கண்டவர் அல்லரெனக் கேனோபநிடதங் கூறுகின்றது. இவரெல்லாம் இங்ஙனமாக, மாணிக்கவாசகப் பெருமானோ தாம் பாடியருளிய திருவாசகச் செழுந்தமிழ் மறையில் எல்லாம்வல்ல முழுமுதற் கடவுள்தம் கட்புலனுக்கு எதிரே வெளிப்பட்டுத் தோன்றித் தமக்கு அருள்செய்த அரும்பெருந்திறத்தை ஆராமையோடும் பல இடங்களிலுங்

கூடக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/203&oldid=1587650" இலிருந்து மீள்விக்கப்பட்டது