உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -1

171

குறிப்பிட்டிருக்கின்றார்; அக் குறிப்புகளிற் சிலவற்றை இங்கு

எடுத்துக் காட்டுகின்றாம்.

'திகழாநின்ற திருமேனி காட்டி

என்னைப் பணிகொண்டாய்.

“பேணு பெருந்துறையிற்

وو

கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட

அண்ணாமலையானை,

“உருநாம் அறியஓர் அந்தனனாய்

ஆண்டு கொண்டான்

(குழைத்தபத்து, 10)

(திருவம்மானை, 10)

(திருத்தெள்ளேணம், 1)

இவ்வாறு இறைவன் தம் கண்ணெதிரே தோன்றித் தம்மை யாட்கொண்டது நனவிலேயே யல்லாமற் கனவில் அன்று என்பது நன்கு விளங்க,

“நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி."(போற்றித் திருவகவல், 144) “நனவே எனைப்பிடித்து ஆட் கொண்டவா

(திருத்தெள்ளேணம். 10)

என்று அடிகளே அருளிச்செய்திருத்தல் நினைவுகூரற் பாலது.

அங்ஙனந் தமக்கு வெளிப்பட்ட இறைவனது திருவுருவம் பொன்வடிவாய்ச் சிவந்து மிளிர்ந்ததென்றும், அதன் பக்கத்தே நீலவடிவான அம்மையின் திருவுருவமும் ஒருங்கு காணப்பட்ட தென்றும், அங்ஙனம் எழுந்தருளிய இறைவன் தம்மைக் கட்டுப்படுத்திய மும்மலங்களையும் அறுத்துத் தம்மைத் தூய்மை செய்தானென்றும் பல விடங்களிலும் அருளிச் செய்திருக்கின்றார்; அவற்றுட் சில வருமாறு:

“பாரிடைப் பாதங்கள் காட்டிப்

66

பாசம் அறுத்து எனை ஆண்ட

ஆருடை அம்பொனின் மேனி அமுதினை”

"அரத்தமேனியாய் அருள் செய் அன்பரும் நீயும் அங்கெழுந்தருளி

இங்கு எனை இருத்தினாய்,"

(குயிற் பத்து, 9)

(திருச்சதகம் 93)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/204&oldid=1587651" இலிருந்து மீள்விக்கப்பட்டது