உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

மறைமலையம் 22

“மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி" (திருக்கோத்தும்பி, 14)

66

பைங்குவளைக் கார்மலராற்

செங்கமலப் பைம்போதால்

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவில்”

“பல்லோருங் காண என்றன்

பசுபாசம் அறுத்தானை,

(திருவெம்பாவை, 13)

(கண்டபத்து, 4)

“மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்றான்

நம்மை ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த

க்

அம்மைஎனக் கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே.”

(அச்சோப்பதிகம், 9)

"திருப்பெருந்துறையில் எழுந்தருளித் தம்மை அடிமை கொண்ட முதல்வன் தம்மைவிட்டு மறையும்பொழுது தில்லை யம்பலத்தே வா!” எனக் கட்டளையிட் டருளினமையை,

“நாயினேனை ‘நலமலி தில்லையுட்

66

கோலம் ஆர்தரு பொதுவினில் வருக' என

ஏல என்னை ஈங்கு ஒழித்தருளி.” (கீர்த்தித் திருவகவல், 127-129) என்று அடிகளே அருளிச் செய்திருத்தல் காண்க.

இங்ஙனமாக மாணிக்கவாசகப் பெருமானுக்கு இறைவன் தனது உண்மைத் திருவுருவத்தை நனவே விளங்கக் காட்டிப் பேரருள் புரிந்தமை, அவனை நேரே கண்ட அப் பெருமானே நமக்குத் தமது அருமைச் செந்தமிழ்ப் பாடல்களில் ஐயுறுதற்குச் சிறிது இடன் இல்லாதவாறு நவின்றிருத்தலால், அது கொண்டு அவரது வரலாற்றினைக் கூறும் புராணவுரைகளும் மெய்யுரை களெனவே துணியற் பாலனவாயிருக்கின்றன.

இனி, மாணிக்கவாசகர்க்கு இறைவன் கட்புலனாய்த் தோன்றி அருள்செய்தவாறு போலவே, ஏனையொரு காலத்து ஏனையொருவர்க்குத் தோன்றி அருள்செய்த திருவுருவமும் மாணிக்கவாசகர் கண்ட திருவுருவத்தினோடு ஒப்பதென

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/205&oldid=1587652" இலிருந்து மீள்விக்கப்பட்டது