உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 1

173

அவ்வேனையோர் மிழற்றிய இன் உரை கொண்டுந் துணியப்படு மாயின், அவ்விருவர் கண்டகாட்சியும் மெய்க் காட்சியே எனப் பெறப்படுதலோடு, அவர் தங்காட்சிக்குப் புலனாய இறைவனது திருவுருவமும் இப் பெற்றிதேயாம் என்றும் இனிது துணியப்படுமன்றே! அற்றேற், பிறிதொரு காலத்து அங்ஙனம் இறைவனது உண்மையுருவினைக் கண்டார் யாவரெனின்; அவர்தாம் ‘திருஞான சம்பந்தப் பிள்ளையார்' என்று அறியற் பாற்று. திருஞானசம்பந்தப் பிள்ளையார் இறைவனைக் கண்டதிற், பின்னும் ஒரு பேருண்மை இருக்கின்றது.பிள்ளையார் இறைவனைக் கண்ட காலத்து மூன்று ஆண்டுமட்டும் உடை ஓர் இளங் குழந்தையாய் இருந்தனர். உலக இயற்கையும் மக்களியற்கையும் சிறிதும் உணரப் பெறாததும், தான் வேண்டிய பால் சோறு முதலியவற்றையுங் கூடச் செவ்வையாகச் சொல்லத் தெரியாமற் பாச்சி சோச்சி என்று சொல்லுவதுமான ஒரு சிறுமகவு கடவுளின் திருவுருவத்தை நேரே கண்டு அதனாற் பேரருள் செய்யப்பெற்றுத், தான்கண்ட அத் திருவுருவத்தின் இயல்பினையும், அது தனக்குச்செய்த பேரருட்டிறத்தையும் குறிப்பிட்டுப், பன்னெடுங்காலங் கல்வி பயின்றவர்களாலும் பாடமுடியாத அழகிய பாடல்களில் அக் கடவுளை வாய்திறந்து பாடுமெனின், அக் குழந்தையின் அரும் செம் பாடல்களைக் கேட்டோர் அதன் அருட்பேற்றை நினைந்து நினைந்து வியப்பரன்றி, அதன் சொற்களிற் றினைத்துணையும் ஐயம் உறாரன்றே! இங்ஙனமே, சிறுமதலையா யிருந்தபோது திருஞான சம்பந்தப் பிள்ளையார் இறைவனது திருவுருவத்தை நேரே காணப்பெற்று, அவ்வுருவத்தின் றன்மையினையும் அது தனக்குச் செய்த அரும்பேற்றினையுங் குறிப்பிட்டுச் சொல்லிக், கற்றவராலும் பாடமுடியாத அத்துணை அரும் செந்தமிழ்ப் பாடல் அப்போது தாமே பாடியிருக்கின்றார், அச் செய்யுள் வருமாறு:-

"போதையார் பொற் கிண்ணத்து அடிசில்பொல்லாதுஎனத் தாதையார் முனிவுஉறத் தான்எனை ஆண்டவன் காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்

பேதையா ளவளொடும் பெருந்தகை இருந்ததே’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/206&oldid=1587653" இலிருந்து மீள்விக்கப்பட்டது