உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

மறைமலையம் 22

.

அரும்பெறல் மணியே அனைய இவ் அருந்தமிழ்ச் செய்யுளில் திருஞானசம்பந்தப் பிள்ளையார், தாம் சிறுகுழந்தையாய் இருந்தபோது தம் கண்ணெதிரே இறைவன் வெளிப்பட்டுத் தோன்றி ஒரு பொற்கிண்ணத்தில் தமக்குப் பால் ஊட்டித் தம்மை ஆட்கொண்டருளின அருட்பெருக்கினையும், அங்ஙனந் தமக்கு இறைவனே பாலூட்டின அதனை அறியாத தம் தந்தையார் தம்மேல் வெகுண்டமையினையும், தம்மெதிரிற் றோன்றிய இறைவன் றிருவுருவம் காதிற் குழையிட்ட ஆண்வடிவம் அதன் பக்கத்தே ஒரு பெண்வடிவும் உடையதாய்த் திகழ்ந்தமையினையும் தெளித்துக் கூறியிருக்கின்றார். இவ்வாறு சிறுமகவா யிருந்த காலத்தில் திருஞானசம்பந்தப் பிள்ளையார் இறைவன் திருவுருவினை நேரே கண்டு அருள்பெற்று, அவ்வருட் பேற்றாற் பெரிதுஞ் சிறந்த செந்தமிழ்ப் பாட்டுகள் பாடுந் திறமும் அக் குழவிப் பொழுதிலேயே அடைந்து, அவ்விறைவன் திருவுருவம் இங்ஙனந்தான் இருந்ததெனவுந் திட்டமாகப் பாடியிருத்தலின், அவர் கண்டு சொல்லிய அவ்வரும்பெருங் காட்சி உண்மையோ அன்றோ என ஐயுறுதற்கு எவரும் இடம்பெறார் என்க. மேலும், பிள்ளையார் கண்டு சொல்லிய இறைவன் திருவுருவமும் மாணிக்கவாசகர் கண்டு சொல்லிய இறைவன் திருவுருவமும் ஒரு சிறிதும் மாறுப ாது எல்லாவற்றானும் முழுதொத்துக் காணப் படுதலின், அவ்விருவரும் வெவ்வேறு காலத்துக் கண்ட அவ்வுருவமே இறைவற்கு உண்மையான உருவமாம் என்பதூஉம், அவ் விருவருமே இறைவனை உண்மையாகக் கண்டோராவர் என்பதூஉம், அதனால் அவ் விருவருமே தாம் உண்மையாகக் கண்ட கடவுளின் இயல்புகளையும் அஃது உயிர்கட்குச் செய்யும் ஆரருள்களையும் எடுத்துப்பேசும் உரிமையும் ஆற்றலும் வாய்ந்தோராவர் என்பதூஉம் கடைப்பிடித் துணரற்பாலன. இவ்விருவருங் கட வ்விருவருங் கடவுளை நேரே காணப்பெற்ற அருளாள ரானதனாலன்றோ, கடவுளைக் காணாது அறவொழுக்கத்தை மட்டும் அறிவுறுத்தி வர்த்த மானர் ஆக்கிய சமணமதமும், கௌதம புத்தர் ஆக்கிய புத்த மதமும் அவ்விருவர்க்கு முன் நிற்கலாற்றாது தோற்று மறைந்தன. கௌதமர் கருத்துப்படி, முழுமுதற் கடவுளைக் கண்ட அவ்விருவருமே அக் கடவுள் வழிபாடாகிய சைவ சமயத்தை

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/207&oldid=1587654" இலிருந்து மீள்விக்கப்பட்டது