உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

1

175

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் இவ் விந்திய நாட்டின்கண் நிலைநிறுத்தும் உரிமைபெற்றார் என்க. பிள்ளையாரும், அடிகளுங் கண்ட திருவுருவமே முழுமுதற் கடவுளுக்கு உண்மையுருவமாதல் ஆராய்ச்சிவகை யானும் இனிது விளங்குமாற்றை எமது ‘சிவஞானபோத ஆராய்ச்சி' யில் அம்மையப்பர்' என்ற தலைப்பின்கீழ் விரித்துக்காட்டியிருக்கின்றேம்.

L

அஃதொக்கும், திருஞானசம்பந்தர் கடவுளைக் கண்ட ஞான்று சிறுமதலையாய் இருந்தார் என்பது அவரது வரலாற்றினைக் கூறும் 'திருத்தொண்டர் புராணத்' தாற் பெறுதுமோ, அதனினுஞ் சிறந்த பிறிதொரு சான்றாற் பிள்ளையார் மதுரைமாநகர்க்கு எழுந்தருளிய ஞான்று, சமணக் குருக்கண்மார் பிள்ளையார்க்கு இழைத்த தீங்குகளைக் கண்டு பெரிதும் உள்ளம் வருந்திய மங்கையர்க்கரசியார் என்னுங் கூன்பாண்டியன் மனைவியாரை

பறுதுமோவெனிற்,

நோக்கி,

“மானினேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள்

பானல்வாய்ஒரு பாலன்ஈங்குஇவன் என்றுநீபரி வெய்திடேல்

մ யானை மாமலை ஆதியாய விடங்களிற்பல

அல்லேல் சேர்

ஈனர்கட்குஎளி யேன்அலேன்திரு

ஆலவாய்அரன் நிற்கவே”

என்று பிள்ளையார் திருவாய்மலர்ந்த கொழுந்தமிழ்ப் பாட்டின் கண் தம்மைப் பால் ஒழுகும் வாயையுடைய ஒரு பாலன் என்று தாமே தம்மைக் குறிப்பிட்டிருக்கும் சாலச் சிறந்த அகச்சான்று கொண்டே நன்கு பெறுதுமென்க.

இங்ஙனங் கடவுளை நேரே கண்டு அவன் றிருவருளைப் பெற்றாரான திருஞானசம்பந்தப் பிள்ளையாரும் மாணிக்க வாசகப் பெருமானும் அருளிச்செய்திருக்கும் மெய்யுரை காண்டே, கடவுளின் திருவுருவ உண்மையினையும், மும்மலப் பிணிப்புண்ட உயிர்கள் அவன் திருவடியைச் சார்ந்து அம் மலக்கட்டு நீங்கிப் பேரின்ப வீடு பெறுமாற்றினையும் அறிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/208&oldid=1587655" இலிருந்து மீள்விக்கப்பட்டது