உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

176

மறைமலையம் 22

உய்தல் வேண்டுமே வேண்டுமே யல்லாமற், கடவுளைக் காணாத ஏனையாசிரியர் கூறும் உரைகளை நம்பி வறிதே வழக்காடி வாணாளை வீணாளாக்குதல் மிகவும் இரங்கற்பாலதாம். மேற்கூறிய இரு சான்றோரைப் போலவே திருமூலரும் முழுமுதற் கடவுளை நேரே கண்டாராதலும், அக் கடவுள் அறிவுறுத்தமையால் மெய்ப்பொருளுணர்ச்சி முழுதும் பெற்றாராதலும் திருமந்திரத்தின்கண்,

6

“நான் அறிந்த தன்றே இருக்கின்ற ஈசனை வான் அறிந் தார்அறி யாது மயங்கினர் ஊன்அறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர் தாள்அறி யான்பின்னை யார்அறி வாரே.”

எனவும்,

“பிறவா நெறிதந்த பேரரு ளாளன் மறவா அருள்தந்த மாதவன் நந்தி அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன் உறவாகி வந்துஎன் உளம் புகுந்தானே.'

“நானும்நின்று ஏத்துவன் நாடொறும் நந்தியைத் தானும்நின் றான்தழல் ஒக்குஞ்செம் மேனியன் வானின்நின்று ஆர்மதி போல்உடல் உள்உவந்து ஊனின்நின்று ஆங்கே உயிர்க்கின்ற வாறே."

எனவும்,

“மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம் நீலரங்க மேனியன் நேரிழை யாளொடு மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின் சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.'

எனவும்,

“பின்னைநின் றென்னே பிறவி பெறுவது முன்னைநன் றாக முயல் தவம் செய்கிலீர் என்னைநன் றாக இறைவன் படைத்தனன் தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/209&oldid=1587656" இலிருந்து மீள்விக்கப்பட்டது