உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

18

177

ஆசிரியர்

எனவும், அவர் தாமே அருளிச் செய்திருக்கும் திருப்பாட்டுகளால் நன்கு விளங்குதலின், அவர் அத் திருமந்திரவேதத்தின்கண் நுணுக்கமாக விரித்துக்காட்டியிருக்குஞ் சைவ சித்தாந்தப் பொருள்களும், இங்ஙனமே தாம் இளங்குழவியாய் இருந்த ஞான்று இறைவன் றிருவருளால் அறிவுறுக்கப்பட்டு மெய்கண்ட தேவ நாயனார் அருளிச் செய்த சிவஞானபோதச் செம்பொருள்களும் முழுதொத்துக் காணப்படுதலின், இவ்விரு நூல்களிலுங் கடவுள் உயிர், மலம், மாயை, வினை, வீடுபெறு என்பவற்றை ஆராய்ந்து காட்டும் அறிவுரைகளே உண்மை உரைகளாம். இறைவனது அருட்பேறின்றிச் சிற்றறிவினரான நம்மனோர் தாந்தாம் வல்லவாறு அவ்வுண்மை உரைகளோடு திறம்பிக் கூறுவன மெய்ம்மை யுணராப் பொய்யுரைகளேயாதல் திண்ணம். கடவுள் முதலான மெய்ப்பொருள்களை ஆராயப்புகும் நம்மனோர், அக் கடவுளை நேரே கண்டு எல்லாம்வல்ல அம் முதல்வன் தனது முற்றறிவு கொண்டு அறிவுறுத்த மெய்ப் பொருளுணர்ச்சி வலியாற் செந்தமிழ்ப் பாடின மாணிக்கவாசகர் திருஞானசம்பந்தர், திருமூலர், மெய்கண்ட தேவர் என்னும் மெய்யுணர்வின் முற்றுப்பேறுடைய ஆசிரியர்கள் அருளிய மெய்யுரைகளையே அடிப்படையாகக் கருத்திலிருத்தி அவற்றொடு முரணாமல் ஆராய்ந்து தமதறிவை விளக்கிக் கொளற் பாலார். இதுவே, பண்டை நாளிலிருந்த புத்தசமய ஆசிரியரான கௌதம சாக்கியர் கருத்தாதல். இதுகாறுங் கூறியவாற்றால் தெளிவுற விளங்கும். கடவுளை கடவுளை நேரே காணாதாரும், அவனதருளை நேரே பெறாதாரும், அவனருளால் மெய்யுணர்வு தெளியப் பெறாதாரும், தாந்தாம் வல்லவாறு தத்தம் அறிவிற்கு உண்மையெனத் தோன்றியவற்றைக் கூறுவாரும் ஆன ஏனையோரை ஆசிரியராகப் பெற்ற ஏனைச் சமயத்தவர்கள், கடவுள் முதலான பொருள்களைப் பற்றி வீணே வழக்குப் பேசிக்காலம் போக்குதலைக் கைவிட்டு, மக்கள் எல்லார்க்கும் நல்லனவாகிய அறவொழுக்கங்களின் வழுவா தொழுகித் தம்மைத் தூயராக்கிக்கொள்ளுதலே செயற்பாலதாம் என்க. இங்ஙனமாகக், கடவுளைக் கண்டாருங் காணாதாருங் கடைப்பிடித்தொழுகல் வேண்டும் முறைகளை வகுத்துக்கூறிய கௌதம சாக்கியருரை எல்லார்க்கும் உடம் பாடாவதேயாகலின், அது சிவநெறிக் கோட்பாட்டிற்கும் இணக்க மாவதேயா மென் உணர்ந்து கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/210&oldid=1587657" இலிருந்து மீள்விக்கப்பட்டது