உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

15. பொருந்தாக் கொள்கைகள் புகுந்தமை

னிக், கௌதம சாக்கியாக்குப் பின்வந்த அவர்தம் மாணாக்கரும் அவரைப் பின்பற்றினாரும், தம் முதலாசிரியர் கருத்து இதுவாதல் தெளியமாட்டாது, கடவுள் உயிர் உலகம் என்பவற்றைப் பற்றி அவர் ஏதும் மொழிந்திடாமைகொண்டு அவை மூன்றும் உண்மையில் இல்லாத வெறும் பாழ் என்று ல்வழக்குப்பேசி வெவ்வேறு புத்த மதங்கள் கட்டினார். கௌதமர் இறந்துபட்ட சில ஆண்டுகளிலேயே, அவர்தம் மாணாக்கருள்ளும் அவரைப் பின்பற்றினாருள்ளும் கொள்கை வேறுபாடுகள் பலப்பலவாய்க் கிளைத்துக் கௌதமரின் அறிவுரைகளைப் பலப்பலவாய்க் கிளைத்துக் கௌதமரின் அறவுரைகளைப் பலப்பலவாறு பிறழ்த்த, அவருள் முதியராய் ருந்தோர் அவைதம்மை ஒரு நெறிப்படுத்தி ஒழுங்கு செய்தற் பொருட்டு இராஜகிருகம் என்னும் நகர்க்கருகே வேனிற் காலத்தில் ஒரு பேரவை கூட்டி, ஆண்டின் முதிர்ந்தோருங் கௌதமர் இருத்திய புத்தசங்கத்தில் முதல் உறுப்பினரும், ஆன மகாகாசியபர் தலைமையின்கீழ் அவற்றைச் சீர்திருத்தஞ் செய்தார்கள். இவ் அவையத்தார் ஒன்பது திங்கள் கூடியிருந்து இத்தகைய சீர்திருத்தங்கள் செய்தனரென இலங்கைப் புத்த சமய சரித்திரங்களான மகாவம்சம், தீபவம்சம் என்னும் இரண்டு நூல்களும் புகலுகின்றன. இங்ஙனம் ஒழுங்கு செய்தும், புத்தசமயக் கொள்கைகள் ஒருவழிப்படாது பின்னும் பலவாறாய்ப் பல்க. முதற்கூடிய பேரவைக்கு நூறாண்டு கழித்து, இரண்டாவது பேரவை வைசாலி என்னும் நகரில் எட்டுத் திங்கள் வரையிற் கூடிப் புத்த சமய அறவுரைகளைப் பின்னுஞ் சீர்திருத்தஞ் செய்தது. இதனாலும் பயன் விளைந்திலது. வேறுபாடுகள் பின்னும் பெருகிக் கொண்டே போயின வென்று தீபவம்சம் கூறுகின்றது. முதலில் மகாயானம், ஈனயானம் என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/211&oldid=1587658" இலிருந்து மீள்விக்கப்பட்டது