உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

179

இருபெரும் பகுப்பாய்ப் பிரிந்த புத்தமதம், பின்னர்ப் னெட்டுச் சிறுசிறு வகுப்புகளாகப் பிரிந்ததென்று று 6

அச்சரித்திரங்களே நுவலுகின்றன.

கி.பி. ஏழாவது நூற்றாண்டின் முற்பாதியில் (629-648) இவ்விந்திய நாட்டிற்கு வந்து இதனூடு நெடுகச் சென்று ஆங்காங்குத் தாங்கண்ட காட்சிகளையெல்லாம் எழுதிவைத்த ஹையூன்த்சாங் என்னும் சீன அறிஞர்தாம் கண்ட புத்தமதப் பிரிவுகளைப் பற்றிப் பின்வருமாறு வரைகின்றார்;

66

‘அறிவுநூற் பிரிவினர் எந்நேரமும் ஒருவரோடொருவர் மாறுபட்டு நிற்கின்றனர்; அவர்கள் மிக்க உறைப்போடும் இடும் வழக்குகளின் ஓசை கடலின் அலைகள் போல் எழுகின்றன. பல்வேறுவகைக் கொள்கையினரும் ஒவ்வோர் ஆசிரியரைப் பின்பற்றி நிற்கின்றனர்; ஆனாற், பல வழிகளாலுஞ் சென்று ஓரிடத்திலேயே சேர்கின்றனர்.”

இங்ஙனமெல்லாம் கௌதம சாக்கியர்க்குப்பின் பலப் பலவாறாய்ப் பிரிந்த புத்தசமயக் கொள்கைகளுள், தமிழ் நாட்டின்கண் வழங்கினவை செளத்திராந்திக பௌத்தம், யோகாசார பௌத்தம், மாத்தியமிக பௌத்தம், வைபாஷிக பௌத்தம் என்னும் நான்கேயாதல் சிவஞான சித்தியார் பரபக்கத்தாற் புலனாகின்றன. இவருட் சௌத்திராந்திக பௌத்தரே ஏனை மூவரினும் முற்பட்டவராகக் காணப்படு கின்றனர். கௌதம சாச்சியர் சிறுசிறு சூத்திரங்களாக அறிவுறுத்திவந்த அறவுரைகளின் முடிபை ஓர் அடிப்படை யாகக் கொண்டு இவர் வர் மதம் மதம் எழுந்தமையால் இவர் சௌத்திராந்திகர் எனப் பெயர் பெற்றார். மாணிக்க வாசகப் பெருமானால் மறுக்கப்பட்ட கொள்கைகளெல்லாம் இலங்கைப் பாளிமொழி நூல்களாகிய மூன்று பிடக நூல்களிற் காணப்படு தலால், அந் நூல்களை இயற்றினவர்கள் சௌத்திராந்திக பௌத்தர்களேயாதல் ஒருதலை. மேலும், தமது காலத்து மக்களாற் பேசப்பட்டன மாகதி, பிராகிருதம், பாளி, தமிழ் முதலிய மொழிகளோயாதலால்' தம்முடைய அறவுரைகள் எல்லார்க்கும் விளங்கல் வேண்டிக் கௌதமர் அவைகளை அம் மொழிகளிலேயே அறிவுறுத்தி வந்தனர்; அக் காலத்திலேயும் ஆரியமொழி எல்லார்க்கும்

இறந்துபட்டதொன்றாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/212&oldid=1587659" இலிருந்து மீள்விக்கப்பட்டது