உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1

181

உலகத்தையும், அகத்தே காணப்படும் உயிரையும் இல்பொருள்களெனக் கோடற் கண் ஒருங்கு ஒத்தலின் இவையெல்லாம் மாயாவாதம் என ஒரு பெயரான் வைத்து வழங்கப்பட்டன.

L

பிற்காலத்தே தோன்றிய சங்காராசாரியார் கட்டிய

இருந்தமை அச் சங்கராசாரியார்க்கு

கொள்கையும் உலகமும் உயிர்களும் இல்பொருள்களேயா மெனக் கோடலின், அதுவும் அப் பௌத்த மதத்தோடு ஒருவைத்து மாயாவாதம் எனவும் பிரசின்ன பௌத்தம் எனவும் வழங்கப்படலாயிற்று. சங்கராசாரியார் காலத்திற்கு முன்னரே மாயாவாதி என்னும் பெயர் வழக்கும், அதனாற் குறிக்கப்படுங் கொள்கையும் முற்பட்டவரான திருமூலர் ஐயைந்து மாயாவதிக்கே என்று அருளிச் செய்தமையால் நன்கு புலனாம். இவ் வுண்மையை ஆராய்ந்து பாராதார் ஒருவர் “மிண்டிய மாயாவாதம் என்று” கூறியதேபற்றி மாணிக்கவாசகப் பெருமான் சங்கராசாரி யார்க்குப் பின் வழங்கிய மாயாவாதக் காற்று வீசப் பெற்றார் என்று பொருந்தாவுரை நிகழ்த்தினார். இப்பொருந்தாவுரையின் பெற்றி காலவாராய்ச்சியில் விரித்துக் காட்டுதும். இனி, நான்காவதாய்க் கூறப்பட்ட வைபாஷிக பௌத்தமானது இற்றைக்கு எழுநூறு ஆண்டுகட்குமுன் இயற்றப்பட்ட சிவஞானசித்தி யாரிலும், நானூற்றைம்பது ஆண்டுகட்கு முன் சாயனரால் எழுதப்பட்ட சர்வதரிசன சங்கிரகத்திலும் இருநூறு ஆண்டுகட்குமுன் திபேத் நாட்டிலிருந்த தாரநாதர் எழுத திய பௌத்தசமய வரலாற்றிலுங்' காணப்படுகின்றதே யல்லாமல் இவற்றிற்கும் முற்பட்ட நூல்களிற் கூறப்படுதலைக் கண்டிலம்.

1.

2.

3.

4.

5.

ம் ம் −

6.

7.

அடிக்குறிப்புகள்

Buddhist India, pp. 153, 154

The Early History of India by Dr. Vincent Smith; p. 29 Ibid. p. 255.

E.B. Cowell's Buddha ChaRITYA; see introdctionï Sscred Books of

the Easti Vol. XLIX.

திருமந்திரம், 8, 3, 38.

திருவாசகம், போற்றித்திருவகவல், 54.

The History of Indian Literature by A. Weber, p. 309.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/214&oldid=1587661" இலிருந்து மீள்விக்கப்பட்டது