உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

-

16. பொருந்தாக் கொள்கைகள் தொடர்ச்சி

இனி, யோகாசாரம், மாத்தியமிகம் என்னும் இவ்விரண் டையும் உள்ளடக்கின மகாயான பௌத்தம் தோன்றியவாறு யாங்ஙனமெனிற் கூறுதும்; அறியாமையென்னும் இருளில் அழுந்தித் தம்மையும் உணராமல், எல்லா அறிவுக்கும் எல்லா இன்பத்திற்கும் இடனாய் விளங்குந் தம் தலைவனையும் உணராமல், தமக்குப் பல்வகையிற் பயன்படுவனவாய்த் தம்மைச் சூழ்ந்துள்ள பொருள்களையும் உணராமற் கிடக்கும் சிற்றறி வுயிர்கட்கெல்லாம் அறிவை விளக்கிப் பேரின்பத்தை ஊட்டுதற் பொருட்டே எல்லாம்வல்ல இறைவன் பேரிரக்கம் உடையனாய். அவ்வவ்வுயிர்கட்கு இவ் வவற்றிற்கேற்ற ஆண் பெண் உடம்புகளைத் தந்து, அவை அவ் வுடம்புகளோடு கூடியிருந்து உயிர்வாழ்வதற்கேற்ற உலகங்களையும் அவ் வுலகத்துப் பல்பொருள்களையும் படைத்துக் கொடுத்து இம்முறையால் அவ்வவ் வுயிர்களின் அறியாமையைச் சிறிது சிறிதா நீக்கி அறிவை விளங்கச்செய்து, அவ்வறிவு விளக்கத்திற் கேற்ற இன்ப நுகர்ச்சியையும் முறைமுறையே மிகுதிப்படுத்தி வருகின்றான். இதனை உணராதார் யாவர்? பழுதற்ற இவ் வுடம்பினையும், இவ் வுடம்பிற் பழுதற்ற உறுப்புகளையும் பெற்றுப் பிறவாவிட்டால் மக்கள் முதற் புழுவீறான வுயிர்கட்குச் சிறிதேனும் அறிவு விளங்குமோ? உடம்போடு கூடிப் பிறந்தாலும் இவ்வுலகம் இல்லையானால் இவ்வுயிர் கட்குச் சிறிதேனும் அறிவு விளங்குமோ? உடம்போடு கூடிப் பிறந்தாலும் இவ்வுலகம் இல்லையானால் இவ்வுயிர்கள் எங்கேயிருந்து உயிர்வாழும்? உடம்பும் உலகமும் இருந்தாலும் இவ்வுலகின்கட் பலதிறப்பட்ட பொருள்கள் இல்லையானால். அவை அவற்றை நுகர்தலும் அவற்றால் அறிவு விளங்கி இன்புறுதலும் யாங்ஙனங் கைகூடும்? இவையெல்லாம் அமைக்கப்பட்டிருந்தாலும்? ஆண் பெண் என்னும் வியப்பான

வ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/215&oldid=1587662" இலிருந்து மீள்விக்கப்பட்டது