உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

1

183

அரிய அமைப்பு இல்லையானால், உயிர்கள் ஒன்றை ஒன்று மருவி இன்பம் என்பது இத்தகையதுதான் என்று உணர்தலும் அதன் வழியே அதனினுஞ் சிறந்த பேரின்பத்தின் இருப்பை யுணர்ந்து அதனைப் பெறுதற்கு அவாவுதலும், அதன் வாயிலாய் ஏனையுயிர்கள் பிறவியெடுத்து ங்ஙனமே நலம்பெறுதற்கு இடஞ்செய்தலும் யாங்ஙனங் கைகூடும்? இருந்தாவற்றால், இவ்வுலகத்திற் காணப்படும் எல்லா அமைப்புகளும், உயிர்களின் அறிவு விளக்கமும் இன்ப நுகர்ச்சியுமாகிய நன்மையின் பொருட்டாகவே அமைக்கப் பட்டிருத்தல் எத்துணைச் சிற்றறி வுடையார்க்கும் விளங்காமற் போகாது. இத்துணைச் சிறந்த இவ்வமைப்புகளில் ஒரு தினையளவாவது மக்களின் மிகச் சிறந்தோராலும் செய்தல் இயலுமோ? இயலாதே! இவை யெல்லாவற்றையும் வகுத்தவன் எல்லாம்வல்ல அறிவும் எல்லா ஆற்றலும் உடைய ஒரு முழு முதற் கடவுளேயாதல் வேண்டுமென்னும் உணர்ச்சியும் எல்லா மக்கள் உள்ளத்திலும் இயற்கையாகவே அமைந்திருக்கின்றது.

இவ்வாறு மக்களின் நன்மையின் பொருட்டாகவே வகுக்கப்பட்டிருக்கும் இவ்வமைப்புகளைப் பெற்று உயிர் வாழும் ஆண் பெண் என்னும் இருபாலாரும், அவற்றை வகுத்தவனது நோக்கமும், அவற்றைத் தம்முடைய அறிவு வளர்ச்சிக்கும் இன்ப நுகர்ச்சிக்கும் ஏற்றவாறு பயன்படுத்தித் தம்மைத் தூயராக்கிக் கொள்ளும் முறையும் நன்கறிந்து ஒழுகி, இவற்றை இங்ஙனம் வகுத்துக் கொடுத்த இறைவனது பேரருட்டிறத்தை நினைந்து நினைந்து நெஞ்சம் நெக்கு நெக்குருகி, அவ்வாற்றால் தமது உணர்வானது, உலகு, உலகின் பொருள்கள், உடம்பு, உயிர் என்னும் இவற்றிற் பதிந்திருந்த பழக்கத்தைப் பையப்பைய நெகிழவிட்டுக், கடைப்படியாகத் தம்மையும் மறந்து தம் தலைவனது பேரின்பவெள்ளத்திற் படிந்து அவ் வின்பவுருவாகி நிற்கும் பெயராப் பெருஞ்செல்வ வாழ்வைப் பெறுதலே செயற்பாலார். மற்றுக், கௌதம சாக்கியர்க்குப்பின் எழுந்த பௌத்தமதமோ 'உலகமும் இல்லை, உலகத்துப் பொருள்களும் இல்லை, உடம்பும் இல்லை, உடம்பினுள் உயிரும் ல்லை, எல்லாம்

கணங்கடோறுங் கெட்டுக் கெட்டுத் தோன்றி மாயும்; எல்லாப் பொருள் களையும் அருவருத்து நீக்கி, அவாவை யொழித்து உணர்வற்றுக் கிடத்தலே செயற்பாலது' என்று வற்புறுத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/216&oldid=1587663" இலிருந்து மீள்விக்கப்பட்டது