உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

அமைதியாக

  • மறைமலையம் 22 ஓரிடத்திருந்து வாயிற்பெய்து க

சுவைத்து உண்ணுங்கால் மிக்க இன்பத்தையும், உண்டபின் உடம்பின் நலத்தையும் பெற்று இனிது வாழ்கின்றான். ஆதலால், முயற்சியும் உணர்ச்சியும் மிகப்பெற்றுப் பொருள்களைத் துய்க்கவேண்டு மளவறிந்து துய்த்தல் உயிர்க்கு நன்றே யாகுமல்லது. ஒருகாலுந் தீயதாகாது. அற்றேல், திருக்குறள் முதலான உயர்ந்த அறிவுநூல்களெல்லா அவாவறுத்தலை மிக வற்புறுத்திக் கூறுதல் என்னை யெனின்; அவ்வறிவு நூல்கள் அவா' என, இழித்துக் கூறியது ஒருவனது அறிவின் ஆட்சிக்கு அடங்கி நில்லாமல் அதனை மேற்கடந்து சென்று தீதுபயக்கும் பெருவிருப்பினையே யாம். எவ்வாறெனிற், பாடுபட்டுத் தேடிய பொருள்கொண்டு சுவை மிக ஆக்கிய உணவினை உண்ணுங் கால் அதன்மேற் சென்ற பெருவிருப்பினால் அதனைத்தன் தீனிப்பை கொள்ளும் அளவினும் மிகுத்து உண்பனாயின் அதனால் நோய்கொண்டு துன்புறுவனன்றே; அவ்வுணவின் மேல் வைத்த பெருவிருப்பினால், தானே வருந்திப் பொருள் தேடி அதுகொண்டு அவ் வுணவைப் பெறாமற் பிறர் பொருளைக் களவு செய்து அதனைப் பெற்றுண்பனாயின் அதனாற் றானும் தன்னாற் பிறருந் துன்புறுதற்கு இடஞ்செய்வ னன்றே; இங்ஙனமாக, இ ஒருவனது அறிவின் ஆட்சிக்கு அடங்காமல் மேற்செல்லும் அவா துன்பத்திற்கேதுவாய் முடிதலால், அத்தகைய அவாவினை அறுத்தல்வேண்டும் என்பதும், மேன்மேற் பொருளை நாட நாடக் கீழ்க் கீழ்ப் பொருளிற் செல்லும் அவாவைத் துடைக்கவேண்டும் என்பதும் அவ்வறிவு நூற் கருத்தாமல்லது, தீங்கு பயவாது நலம்பயக்கும் அவாவினைத் தன் அறிவின் ஆட்சிக்கீழ் வைத்து அவாவிய பொருளைத் துய்த்து இன்புற்று நடத்தலுங் குற்றமாமென்பது அவற்றின் கருத்தன்று. இதுபற்றி யன்றே ஆசிரியர் தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயானார்,

66

'ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலிற் பின்

எனவும்,

66

‘ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/219&oldid=1587666" இலிருந்து மீள்விக்கப்பட்டது