உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

எனவும்,

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

1

187

66

“அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல

துய்க்க துவரப் பசித்து"

எனவும் அருளிச்செய்தார். பெருந்தவச் செல்வரான திருமூல நாயனாரும்,

66

“அஞ்சும் அடக்கு அடக்குஎன்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை அஞ்சும் அடக்கில் அசேதனம் ஆம்என்றிட் டஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே”

என்று அறிவுறுத் தருளினமை காண்க. எனவே, பகுத்துணர்ச்சி யோடு கூடி ஐம்புல நுகர்ச்சிகளையும் நுகர வேண்டும். அளவறிந்து நுகரல் இன்பமே பயப்பதல்லது துன்பத்தைப் பயவாதென்க. மற்றுத் துன்பத்தை நீக்குதற்கு வழிகாட்டுவே மெனப் புகுந்து ஐம்புலன்களையும் இடர்ப்படுத்தி அடக்கும் முறையைக் கற்பித்த பௌத்த சமயத்தினரோ அம்முறையாற் றுன்பத்தைக் களைய மாட்டாராய், மேன்மேற் றுன்பங்கள் கிளைத்தற்கு இடஞ் செய்வாராயினர். ஆமையானது தன்னுறுப்புகளைத்தான் வேண்டும்போது இடர்புகுதாமற் ள்ளிழுத்து அடக்கிக் கொள்ளுதல் போலத், தான் நுகர்தற்குரிய தகுதியுண்டான விடத்து ஐம்புலவின்பங்களை நுகர்தலும், அத் தகுதியில்லா விடத்து அவற்றின்கட் செல்லும் அவாவை மறந்து தன்னை அடக்கிக்கொள்ளுதலுமே சைவசமய ஆசிரியரால் அறிவுறுக்கப்பட்ட அறிவுமொழியாம். இதற்கு,

66

ஒருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து”

என்னும் திருக்குறளே சான்றாம்.

அதுவேயுமன்றி, வேண்டும்போது ஐம்புல வின்பங்களை நுகர்வதூஉம், வேண்டாக்கால் அவற்றினுஞ் சிறந்த தனது இயல்பையும் தனக்கு அவற்றைத் தருவானும் தராது மறுப்பானும் ஆன எல்லாம்வல்ல இறைவனியல்பையும் உணர்ந்து அவனைப் பற்றிநின்று அவற்றை நுகராது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/220&oldid=1587667" இலிருந்து மீள்விக்கப்பட்டது