உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

மறைமலையம் 22

டுவதூஉமாகிய உயிர் ஒன்று உண் L னக்

காள்ளும் சைவசமயக் கொள்கையே உலகமெங்கணுங் காணப்படு கின்றது. உலகின்கட் பகுத்துணர்ச்சியுடைய மக்களெல்லாரும், தம்மை என்றும் உள்ள உயிர் என்று கருதி வாழ்கின்றனரே யல்லாமல், ஒவ்வோர் இமைப்பொழுதும் தோன்றித் தோன்றி இல்லாமல் மாய்ந்து போகும் வெறும் பொருளேதாம் என்று தம்மைக் கருதுகின்றிலர்; தாம் நுகர விரும்பிய பொருள்களைத் தகுதியுள்ளவிடத்து நுகர்கின்றார்கள், தகுதியில்லா விடத்துத் தமது கருத்தை அவற்றினின்றுந் திருப்பி வேறு துறைகளிற் செலுத்துகின்றனர். ஈதல்லாமல், தம்முடைய முயற்சியையும் உணர்ச்சியையுங் கைவிட்டு ஏதுஞ்செய்யாது மடிந்து வறுங்கற்போற் கிடக்கின்றிலர்; இவ்வுலகத்திற் றம்மைப் படைத்து விடுத்துத் தமக்கு எல்லா நுகர்பொருளையுந் தந்த கடவுள் ஒரோவழி அப்பொருள் நுகர்ச்சிகளைத் தமக்குத் தந்திலனாயின், அஃது அவற்றினும் மேற்பட்ட தமது நிலையையும் தம்மை அடிமையாவுடைய அத் தலைவனது நிலையையும் உணர்வித்து எல்லாவற்றினும் மிக்க பேரின்பத்தை நுகர்வித்தற்பொருட்டே யாம் என்று கூறி வாழ்குநரை எங்குங் காண்கின்றனமே யல்லாமல், “துன்பம்! துன்பம்!” என்று சொல்லித் தம்மையுங் கடவுளையும் நினையாது மனம் மடிந்து சாவாரைக் காண்கின்றிலம்; அல்லது, அரிதாய் அங்ஙனஞ் சாவாருளராயின் அவரை அறிவுதிரிந்து மருண்டு உயிர்நீத்த கிறுக்கரெனவே கூறாநிற்கின்றேம். இவ்வாறு உலகமெங்கும் உண்மையாய்ப் பரவியிருக்குங் கொள்கைகளையே சைவசமய ஆசிரியர் அறுவுறுக்கின்றமை,

“மன்னுயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை

“உரன்என்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து’

وو

“சுவைஒளி ஊறுஓசை நாற்றம் என்றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு

“வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்தல் அரிது”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/221&oldid=1587668" இலிருந்து மீள்விக்கப்பட்டது