உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

மறைமலையம் - 22

வாறே செய்து மக்களியற்கைக்கு ஒத்து ஒழுகுவதாயிற்று. இவ்வாறு ஒழுகத் துவங்கியபின்னர்த்தான், புத்தசமயமும் இந்துமதத்தின் ஒரு பிரிவாக ஏற்றுக் கொள்ளப்படலாயிற்று; அப் புத்தசமயத்தின் முதலாசிரியரான கௌதமசாக்கியரும் திருமால் எடுத்த அவதார மூர்த்திகளுள் ஒருவராகக்கருதப்படு வாராயினர். எனவே, புத்தசமயதிற்கு வந்த பிற் சிறப்புக் க எல்லாம் அது சைவசமயக் கொள்கைகளோடு கலக்கப் பெற்றமையினாலேயாமென்பது கருத்திற் பதிக்கற்பாற்று.

ங்ஙனமே, இப் புத்தசமயத்தினின்றுந் தோன்றிச் சைவ சமயத்திற்குரிய 'வேதாந்தம்' என்னும் பெயரையும் தானெடுத்துப் புனைந்துகொண்டு, இப்போது உலகமெங்கணும் பரவிவரும் 'மாயாவாத வேதாந்த' மானது, ‘உலகமும் இல்லை, உயிரும் இல்லை, கடவுளும் இல்லை, எல்லாம் அறியாமையே யாம்' என்று சூனியவாதம் அறிவித்தலின், அது தன்னை மக்களெல் லாருந் தழுவி நடவாமை கண்டு. அதனை நாட்டிய சங்கரா சாரியாரும் அவர் வழியில் வந்தாரும், அதனைப் பரவச் செய்தற் கேற்ற வழி, சைவசமய அடையாளங்கள் வழிபாடுகள் மந்திரக் கிரியைகள் முதலியவற்றை அதன்கட் சேர்ப்பித்தலேயா மெனத் தரிந்து அவற்றை அங்ஙனமே சேர்ப்பித்து, அவ்வாற்றால் தமது மாயாவாத வேதாந்தமும் சைவ சமயமேயா மெனப் பிறர் நம்பும்படிசெய்து, முடிவில் தமது சூனியவாதத் தையே புகட்டி, அதனை யாண்டும் பரவச் செய்து வருகின்றனர். சைவசமயத் தினர்க்குரிய அடையாளங்களான திருநீறு சிவமணி காவி யாடை முதலியவற்றை மாயாவாத வேதாந்திகள் தாமும் அணிந்து கொண்டு, சந்திரமெளலீசுவரர்’ என்னும் சிவபெருமான் திருவுருவின் வழிபாடும், 'நமச்சிவாய' என்னுஞ் சிவமந்திரமும், திருக்கோயில் எடுப்பித்தல், திருக்கோயிற் றொண்டுபுரிதல், சிவனடியார்க்குத் திருவமுதூட்டல், அவர்க்குத் தொண்டு செய்தல், அறுபத்துமூவர் திருமடங்கள் அமைத்தல் முதலான சைவசமயக் கிரியைகளும் மேற்கொண்டு, உண்மைச் சைவர்க்குந் தமக்கும் வேற்றுமை தெரியாதவாறு நடந்து வருதலைச் சைவசித்தாந்தம் உணர்ந்தார் எவரும் நன்கு அறிவர்.

சித்தாந்தக் கல்வி கல்லாத ஏனைச் சைவர்கள் இம்மாயா வாத வேதாந்திகளையே உண்மைச் சைவராக நம்பிப் பலவகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/225&oldid=1587672" இலிருந்து மீள்விக்கப்பட்டது