உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

191

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் அங்ஙனம் அது மங்குவதைக் கண்ட நாகார்ச்சுனர் என்னும் பளத்தமத அறிஞர் ஒருவர், அதனை மங்காமல் நிலை நிறுத்துவதற்கு ஏற்றவழி; சைவசமயக் கொள்கைகளிற் சில பலவற்றையும், மந்திரக் கிரியைகளிற் சில பலவற்றையும், எடுத்துச்சேர்த்துப் பௌத்தமதத்தை முழுதுந் சைவசமயத்தின் ஓர் உட்பிரிவாய்ச், சிவபெருமாற்குக் காதற்கிழத்தியென வமர்ந்து உலகுயிர் எல்லாம் வருந்தாது ஈன்ற இறைவியான அம்மையையே வழிபடுஞ் சாத்தமத மந்திரக் கிரியைகளையுங் கோட்பாடுகளையும் எடுத்துச் சேர்த்துத் திருத்தி, அங்ஙனந் திருத்திய பௌத்தமதத்தை மகாயான பௌத்தம் என்று வழங்கலாயினர். இவர்க்குப்பின் கி.பி. நான்காம் நூற்றாண்டில் வந்த அசங்கா என்பவரும் அங்ஙனமே சாத்தமத தந்திரக் கொள்கையும் மந்திரக் கிரியைகளையும் இன்னும் மிகுதியாய் எடுத்துச் சேர்த்து மகாயானத்தின் மற்றொரு பிரிவான யோகாசாரா பௌத்தத்தை உண்டாக்கினர். இவ்வாறு சைவசமயக் கோட்பாடுகள் கலந்த பின்னர்தான் மகாயான பௌத்தமானது வடக்கே இமயமலைக்கு அப்பாலுள்ள நேபாளம், திபேத்து, சீனம், யப்பான், சீயம், பர்மா முதலான நாடுகளில் மிக விரைந்து பரவி உலகத்தின் அரைப்பகுதிக்கு மேல் உள்ள மக்கட்கு உரிய மதமாயிற்று.

இங்ஙனம் சைவசமயக் கோட்பாடுகளை எடுத்துச் சேர்த்துத் திருத்திய பெளத்த மதமானது. இதற்கு முந்தியிருந்த பௌத்த மாணாக்கர்களாற் கட்டப்பட்டுக் கணபங்கவாதம் ஒன்றே நுதலுவதாகிய சௌத்திராந்திக பௌத்தத்தினுஞ் சிறந்ததென வடநாட்டிலுள்ள பௌத்தர்களாற் கருதப்பட்டது பற்றிச் ‘சிறந்தவழி' எனப் பொருள்படும் ‘மகாயானம்' என்னும் அடைமொழி கொடுத்து வழங்கப்படலாயிற்று. மற்று, இதனினும் முற்பட்டுத் தோன்றி இலங்கையில் வழங்கிவரும் பௌத்தம் ‘எல்லாம் எல்லாம் இல்லை' என வெறும் பாழ் கூறுஞ் சூனியவாத’மாய் மட்டும் முடிதலின், ‘இழிந்தவழி' எனப் பொருள்படும் ‘ஈனயானம்' எனும் அடைபுணர்த்து வழங்கப் படலாயிற்று. சூனியவாதங் கூறுதற்கண் மகாயானமும் ஈ ஈனயானமும் ஒருங்கொக்குமேனும், மகாயானமானது சூனிய வாதத்தைக் காள்கை யளவாய் வைத்துக்கொண்டு, கடவுளரை வழிபடும் முறைகளெல்லாம் சைவசமயத்திலுள்ள

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/224&oldid=1587671" இலிருந்து மீள்விக்கப்பட்டது