உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

  • மறைமலையம் 22

கற்றலுங் கற்பித்தலுஞ்செய்து போதருகின்றார். இருவினைக் கீடான உடலெடுத்துப் பிறப்பிறப்புத் துன்பங்களிற் கிடந்துழலுஞ் சிற்றுயிர்களும், இயல்பாகவே வினையின் நீங்கி எவ்வகைத் துன்பமும் இலதாய் அறிவாய் விளங்கும் முழுமுதற் கடவுளும் ஒரு பொருளேயாமென்றலும், எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளை அறியாமையுருவான L மாயையானது மறைத்து அதனியல்பைக் கெடுத்து அதனைச் சிற்றுயிர்களாக்கி உழல்வித்த தென்றலும் யாங்ஙனம் பொருந்து மெனின்; 'இத்தகைய கேள்விகள் கேட்டல் ஆகாது, இவையெல்லாம் அனுபவத்திலே தான் விளங்கும்' என்று தாம் எல்லா அனுபவமுங் கண்டார்போற் சொல்லிப் பிறரை ஏமாற்றும் இம் மாயாவாத வேதாந்திகளின் முன்னோடுபின் முற்றும் முரணும் வழுக்கொள்கைகளும், அவர் மேற்கொள்ளும் சைவசமய அடையாளங்களினாலேதாம் எங்கும் பரவிவருகின்றன வென்று கடைப்பிடிக்க.

இவ்வாறெல்லாம் மகாயான பௌத்த மாயாவாதமும்

வேதாந்த மாயாவாதமும் சைவசமய அடையாளங்களைத் தழுவா நிற்ப இவை தமக்கு முற்பட்ட சௌத்திராந்திக பௌத்த மாயாவாதமோ எவ்வகையினுஞ் சைவ சமயத்தோடு இணங்கா தாய், அகத்தும் புறத்தும் அதனொடு முழுதும் மாறுபட்டு நிற்பதொன்றாயிற்று. அது கௌதம சாக்கியராற் கட்டப் பட்டதன் றென்பதூஉம், அவரையடுத்து அவர்க்குப்பின் வந்த மாணாக்கராற் கட்டப்பட்டதா மென்பதூஉம் மேலே விளக்கிக் காட்டினாமாதலிற், கெளதமர்க்குப் பின்னெழுந்த சௌத்தி ராந்திக மதமே சைவசமயத்திற்கு முழுதும் மாறாய் நிற்பதாகு மென உணர்ந்துகொள்க மாணிக்கவாசகப் பெருமான் அச் சௌத்திராந்திகக் கொள்கைகளை மறுத்த முறை, சைவ சித்தாந்தக் கொள்கைகளை விளக்கும் சிறந்த பழைய நூல்களுள் ஒன்றாகிய சிவஞானசித்தியார் பரபக்கத்துள் மறுத்த முறையாகவேதான் இருத்தல்வேண்டுமென்பதை முன்னரே காட்டினம். இனி, அச் சிவஞானசித்தியார் பரபக்கத்துட் காட்டி மறுக்கப்பட்ட கொள்கைகளே பழைய ஈனயான பௌத்த நூல்களில் உளவென்பதனை ஈண்டு அடைவே வகுத்துக் காட்டுவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/227&oldid=1587674" இலிருந்து மீள்விக்கப்பட்டது