உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1

1❖

195

முற்கணத்திருந்தது பிற்கணத்து இல்லையாமெனவும், முன்முற் கணத்திருந்தது கெட்டுக் கெட்டு மாயப், பிற்பிற் கணத்துப் புதிது புதிது தோன்றுமேயன்றித் தொடர்பாக என்றுமுள்ள உயிர் என்பதொன்று இல்லையென்னுங் கொள்கை, மிலிந்த பங்கம், நாற்பதாம் இயலில் நாகசேனன் என்னும் பௌத்த முனிவர் ஒருவர்க்கும் மிலிந்தன் என்னும் அரசற்கும் இடைநிகழ்ந்த வினாவிடையுரையுள் நன்கு காணப்படுகின்றது.

இனிப், பெளத்தமத முதலாசிரியன் பிறவுயிர்களின் துன்பம் பொறானாய், அவற்றைக் களைதல் வேண்டி மக்களும் விலங்குகளுமாகிய பல்வேறு பிறவிகளை எடுத்த கதைகள் ஜாதககாதை என்னும் நூலுள் ஒருங்கு தொகுத்துச்

சால்லப்பட்டிருக்கின்றன.

னிக், கௌதமசாக்கியர் பிறந்தஞான்று அவர் தம் அன்னையின் விலாப்புறத்தைக் கிழித்துக்கொண்டு பிறக்க, அவர்தம் அன்னை ஏழாம் நாள் உயிர் துறந்தன ரென்பது அஸ்வகோஷா என்பவர் எழுதிய புத்த சரிதத்திலும், ஜாதக்காதை முகவுரையிலும் புகலப்பட்டிருக்கின்றது.

இ னிக், கொடிஞ்சியுந் தட்டுந் தூணும் இருசும் உருளும் நுகரும் ஆகிய உறுப்புகள் ஒருங்கு தொக்க தொகையே 'தேர்' எனப்படுவ தல்லால் இவ் வுறுப்புகளின் வேறாகத் ‘தேர்' என்பதொரு முதல் இல்லாமை போல, ஐவகைக் கந்தங்களும் ஒருங்குதொக்க தொகையே உடம்பும் உயிருமாவதன்றி அக் கந்தங்களின் வேறாய் உடம்பென்றும் நுவலப்படும் முதல்கள் இல்லையென்னுங் கொள்கை மிலிந்தபங்கம், இருபத்தைந்தாம் இயலிலும், விசுத்திமார்க்கம், பதினெட்டாம் இயலிலும் விரித்தோதப்பட்டிருக்கின்றது.

உயிரென்றும்

இனி, அவாவும் புலனுணர்வும் மனனுணர்வும் ஏ னையுணர்வுங் கெட்டு அடைவதே 'நிருவாணம்' என்பது. சம்யுக்தநிகாயத்தில் இருபத்திரண்டாம் இயலிற் சொல்லப் பட்டிருக்கின்றது.இவ்வாறு நிருவாணத்தை அடையும் உயிரும் இல்பொருளா மென்பதே இப்பௌத்தர்தங் கொள்கை யாதலின், இந் நிருவாணம் என்பது ஒன்று மில்லாத வெறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/228&oldid=1587675" இலிருந்து மீள்விக்கப்பட்டது