உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

மறைமலையம் - 22

பாழாகிய சூனியமே யல்லது பிறிதன் றென்பதூஉம் இதனால் அறியப்படும்.

இனி, ஒருவன் எடுத்த ஒரு பிறவியில் அவன்றன் உடம்பும் உயிரும் உணர்வுமாகிய எல்லாம் ஒருங்கே கெட்டொழிய, அவன் அப் பிறவியிற் செய்த வினைகள் மட்டும் அங்ஙனங் கடாமல் நின்று அவற்கு வேறொரு பிறவியினைத் தரும் என்னும் பௌத்தர் கொள்கை விசுத்திமார்க்கம் பதினேழா வதியலிற் சொல்லப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு காட்டப்பட்ட மேற்கோள்கள் கொண்டு, சிவஞானசித்தியார் பரபக்கத்தில் எடுத்து மறுக்கப்பட்ட சளத்திராந்திக பௌத்தர்தங் கொள்கைகள் எல்லாம் பழைய பௌத்தசமய நூல்களில் உள்ளனவேயா மென்பது நன்கு தெளியப்படும்.

1.

அடிக்குறிப்பு

'மாயாவாதம் அசச்சாஸ்த்ரம் ப்ரச்சந்நம் பௌத்தம் ஏவச' - பதுமபுராணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/229&oldid=1587676" இலிருந்து மீள்விக்கப்பட்டது