உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197

17. பௌத்தகுருவுக்கு விளக்கிக்காட்டிய

உண்மைகள்

இனிப், பௌத்தகுரு, சைவசமய உண்மைகளை எடுத்துச் சொல்லும்படி மாணிக்கவாசகப் பெருமானைக் கேட்ட பொழுது, அவர் எடுத்துக் கூறியனவாகத் திருவாதவூரர் புராணங் காட்டியிருக்குஞ் சைவசமயக் கொள்கைகள் அவை தம்மைக் கேட்கும் புறச்சமயத்தார் ஏற்றுக் கொள்ளத் தக்க அளவைமுறையிற் காட்டப்படவில்லை. நுமது கடவுள் எத்தகையது? என்று புத்தகுரு வினவியதற்கு, ‘எமது கடவுள் திருவாலநீழலமர்ந்து அறம் உரைப்பது, பொன்னம்பலத்தே திருக்கூத்தியற்றுவது. மேலே திருநீ றணிந்திருப்பது. தனது ஒரு கூற்றில் உமைப் பிராட்டியாரை வைத்திருப்பது அதன் பெருமை நம்மாற் சொலற்பாலதன்று' என்று மட்டும் விடைகூறினால், அஃது அப் புத்தகுருவே யன்றி, ஏனை எச் சமயத்தவரும் ஏற்றுக் கொள்ளத் தக்க வாய்ப்புடையதாகாது; அஃது அவர் எல்லாரும் நகுதற்கே இடந்தருவதாம். ஆகவே, எல்லா நுண்ணறிவும் ஒருங்கு வாய்க்கப்பெற்று அளவைநூன்முறைக்கு வரம்பாயுள்ள அடிகள். அங்ஙனம் அப்புராணங் கூறுமாறு விடைகள் அளித்திருப்பரென்று கொள்ளுதல் சிறிதும் பொருந்தாது. மற்றைச் சமயத்தவர் கொள்கைகளை மறுக்கும் போது மட்டும் அளவை நூன்முறை பிறழாது அறிவு நுட்பத்தோடு மறுத்துப் பேசித், தம்முடைய சமயக் கொள்கைகளைப் பிறர்க்கு எடுத்துக்காட்டு மிடத்தோ அவைதம்மைக் கேட்கும் புறச்சமயத்தார் அறிவு பற்றுமாறு பொருந்தப் பேசாது இவையெல்லாம் எம்முடை ய வேதங்களில் நன்கு தெளிவுறுத்தப்பட்டிருக்கின்றன; இ களின் பெருமை எல்லாம் எடுத்துச் சொல்லலாந் தன்மைய தன்று' என்று மொழிதல் எத்துணைச் சிறிய அறிவினார்க்கும்

ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/230&oldid=1587677" இலிருந்து மீள்விக்கப்பட்டது