உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

மறைமலையம் 22

ஏற்பதன்று. இங்ஙனமே, ஒவ்வொரு சமயத்தாருங் கூறிடுவராயின், அவரெல்லாம் வரெல்லாம் ஒரு முடிவுக்கு வருதலும் இயலாது. எந்தச் சமயத்தில் உண்மை உளதென்று காண்டலும் இயலாது.

அற்றேல், உலகத்திலுள்ள சமயத்தவர் ஒவ்வொருவருந் தத்தங் கொள்கையே உண்மையானதென்று பகர்ந்து வழக்கிடக் காண்டலின், அவரெல்லாம் ஒரு முடிபுக்கு வருதல் யாங்ஙனங் கைகூடுமெனின்; எதன்கண் உண்மை உளது எனக் காணும் வேட்கையுடையார்க்கன்றித் தாந்தாங் கொண்டே உண்மை. ஏனைப் பிறர் கூறுவனவெல்லாம் வெறும் பொய்யெனக் கருதுந் தீய பற்று உடையார்க்கு ஒருகாலத்தும் உண்மை விளங்காது; இத்தகைய தீய பற்றுடையாரே உலகில் மிகப் பலராயினும், ஒவ்வொரு சமயத்தும் உண்மை காணும் வேட்கையுடையார் சிற்சிலரேனும் இருப்பராகலின், அவர்கட்கு உண்மையை எடுத்துச் சொன்னால் அவர்கள் அதனைக் கைப்பற்றாது விடார். அஃதொக்குமாயினும், ஒன்றினொன்று ஒவ்வாக் கொள்கைகள் உடைய பல்வேறு வகைப்பட்ட சமயத்தவர்களும் அங்ஙனம் ஒரு முடிபுக்கு வருதல் யாங்ஙன மெனின்; உலகத்தில் உள்ள எல்லா மக்கட்கும் உடம்பாடான கொள்கைகள் பல எங்கும் உண்டாகலின், அவற்றின் உதவிகொண்டு முடிந்த உண்மை களைத் தெரிதல் எவர்க்கும் இயல்வதேயாம். எதுபோலவெனிற் காட்டுதும்; ஒவ்வோர் உயிரும் தன்தன் உடம்பைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும், அப் பாதுகாப்புக்கு இன்றியமையாத உணவுப் பண்டங்களைத் தேடித் தன்றனக்கே வரைந்துவைத்துக் காள்ளும்

முயற்சியிலும் நிரம்பவுங் கருத்தாயிருக்கின்றது ‘உலகமும் உலகத்துப் பொருள்களும் பொய், உடம்பும் பொய். உயிரும் பொய், ஆதலால் உடம்பைப் பாதுகாவாதே. உணவுப் பண்டங்களைத் தேடாதே. அப் பண்டங்களை உட் கொள்ளாதே என்று மாயாவாதி ஒருவன் அறிவுகூறப் புகுவனாயின், அவனை ‘அறிவு பிறழ்ந்துபோன மருளன்' என்று சொல்லிக்குநர். அவன் கூற்றை ஒரு பொருட்படுத்தாது எல்லாரும் ஏகுவரேயல்லாமல் அதனை அறிவுரையென்று கற்றார் முதற் கல்லாதார் ஈறான எவருங் கொள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/231&oldid=1587678" இலிருந்து மீள்விக்கப்பட்டது