உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

199

காள்கை

இவ்வாறு உலகத்திலுள்ள ஒவ்வோர் உயிருந் தன்னைத் தனித்தனி யுயிரென்றே கருதித் தன்றன் உயிர் நிலையைப் பாதுகாப்பதிற் பெரிதும் ஈடுபட்டு நிற்றலின். இப்பொதுக் கொள்கைக்கு முரணாக ‘எல்லாம் ஓர் உயிரே' என்றேனும், 'உயிர் என்பதொன்றில்லை. கடவுள் ஒன்றுமே யுளது என்றேனும், 'உலகத்திற் காணப்படுவன வெல்லாம் வல்லாம் இல்லாத வெறும் பொய்' என்றேனும் மாயாவதி கூறுவனாயின், அவனுரை மெய்யென எவரானுங் கைக்கொள்ளப்பட மாட்டாது. அல்லது, அவனுரையின் புரட்டில் மயங்கி அதனை உண்மையெனக் கொள்வார் சிலர் உளரேனும், அவர்தாமும் காள்கையின் படியே தமது உடம்பைப் பாதுகாவாதும், பசித்தபோது உணவெடாதும் நடந்துகாட்ட மாட்டுவாரல்லர். உலகத்தார் கடைப்பிடியாய்க் கைக்கொண்டொழுகும் பொதுக் காள்கைக்கு மாயாவாதியார் உரைக்குங் மாறுபட்டு அவர் தம்முள் எவரானுங் கைக்கொள்ளப்படா தொழியச் சைவசித்தாந்தியார் கூறுங் கோட்பாடோ அப் பொதுக்கொள்கையோடு முழுதும் ஒத்து எல்லா மக்களானுங் கைப்பற்றப்பட்டு வருகின்றது. ஒவ்வோர் உயிரும் அறியாமை யோடு கூடியிருத்தலால், அவ்வறியாமை நீக்கத்தின் பொருட்டாகவே அவ்வவ்வுயிர்க்கு ஏற்ற உடம்புகள் மெய்யாகவே தரப்பட்டனவென்றும், அத்துணைச் சிறந்த உடம்புகளைப் பாதுகாத்து உயிரின் அறிவை வளர்த்தல் இன்றியமையாத தாமென்றும், ஒவ்வோருயிர்க்குமுள்ள இன்பதுன்பங்களும் அறிவறியாமைகளும் இறப்புப் பிறப்புக்களுந் தனித்தனியாய் நிகழக் காண்டலால் உயிர்கள் பலப்பலவே ஆகுமல்லது ஒன்றாகமாட்டாவென்றும் சைவசித்தாந்திகள் கூறுங் கோட்பாடு உலகத்தார் எல்லாருங் கைக்கொண்டொழுகும் பொதுக் கொள்கைகளோடு முழுது மொத்திருத்தல் காண்க; இதுபற்றியன்றே,

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/232&oldid=1587679" இலிருந்து மீள்விக்கப்பட்டது