உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

மறைமலையம் 22

“உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென் றுடம்பினை யான் இருந்து ஓம்புகின் றேனே”

என்று திருமூலநாயனாரும்,

66

"அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு”

என்று திருவள்ளுவ நாயனாரும் அருளிச்செய்வாராயினர் என்க. இங்ஙனமே மக்களெல்லார்க்கும் ஒப்பமுடிந்த இன்னும் பல பொதுக் கோட்பாடுகளோடு ஒத்தும் ஒவ்வாதும் நிற்கும் முறையினை அமைதியோடும் ஆழ்ந்து நுனித்து ஆராய்ந்து பார்க்கும் முகத்தால் ‘இச் சமயக் கொள்கை உண்மை’ எனவும்

6

து பொய்' எனவும் பகுத்துணர்ந்து கோடல் இயல்வதேயாம். ஆகவே மாணிக்கவாசகப் பெருமானும் தமது சைவசமய வுண்மையினைப், புத்தரும் மற்றைச் சமயத்தினரும் குழுமிய ஒரு பேரவைக்களத்தில் எடுத்துக்காட்டி நிலைபெறுத்துகின்றுழி, மக்களெல்லார்க்கும் இயற்கையில் உரியனவான பொதுக் கோட்பாடுகளை அடிப்படையாய்க்கொண்டு, அவற்றின்மேல் வைத்தே அதனை விளக்கிக்காட்டினாராதல் வேண்டும் என்னும் இவ்வுண்மையை நினைந்து பார்த்துத் திருவாதவூரர் புராணத்திற் காட்டப்படாத இதனை யாமே கூர்த்தறிந்து எழுதி, அங்ஙனம் எழுதிய சைவசமயக் கோட்பாடுகள் முற்றும் மாணிக்கவாசகப் பெருமான் தழீஇயினவேயாம் என்பதற்குச் சான்றாக அவர் அருளிச்செய்த ‘திருவாசகம்’, ‘திருச்சிற்றம்பலக் கோவையார்’ என்னும் இரு நூல்களிலிருந்து மேற்கோள்களும் உடனுக்குடன் எடுத்துக் காட்டலானேம். இவ் வளவோடு பௌத்தர்க்கும் மாணிக்கவாசகப் பெருமானுக்கும் இடைநிகழ்ந்த எதிர்முக வழக்கிற் கூறுதற்கு இயைபுடையவைகளைக் கூறிமுடித்தாம். இனி, அதன்பின் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் சிலவும் இயம்பி அடிகள் வரலாற்றினை முடிப்பாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/233&oldid=1587680" இலிருந்து மீள்விக்கப்பட்டது