உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201

18. சிவவொளியில் மறைந்தமை

ஆக

னி, மாணிக்கவாசகப் பெருமான் பௌத்தரை வழக்கில் வென்று சைவசமயமே மெய்ச்சமயமென நாட்டியபின், தமது இலைக்குடிலில் வைகியபடியாய் அகத்தே சிவபிரான் றிருவருளில் தமது அறிவைப் படிவித்திருப்பதும், அவனை விட்டுப் புறத்தே அறிவு திரும்பிய வழியும் சிவபிரான் றிருவுருவினைக் கண்குளிரக் கண்டு வணங்கித் திருவாசகச் செழுந்தமிழ்ப் பாடல்கள் ஓதுவதும் முழுதுஞ் சிவநினைவே உடையராய் இருப்பாரானார் அவ்வாறிருந்த நாட்களிலே 'திருப்படையாட்சி’, ‘திருப்படை யெழுச்சி', அச்சோப்பத்து’, ‘யாத்திரைப்பத்து' முதலிய திருவாசகத் திருப்பதிகங்களை அருளிச்செய்தனரெனத் ‘திருவாதவூரர் புராணம்' உரைக்கின்றது. இங்ஙனமிருக்கும் நாட்களில் ஒருநாள் ஒரு பெரியவர், அடிகளிருக்கும் இலைக்குடிலை அணுகி அவர்முன் நின்றார். நின்ற அப்பெரியரை அடி கள் நோக்கி 'இரும்!' எனக் கூற, அவரும் அங்ஙனே அமர்ந்தபின், 'நீவிர் எங்கிருந்து வருகின்றீர்?' என்று அடிகள் வினாயினார். அதற்கு அவர், 'யாம் பாண்டிநாட்டிலிருந்து வருகின்றோம்’ என விடையளித்தார். தமக்கு இறைவன் குருவடிவிற் றோன்றி அருள்புரிந்த இடமாகலிற் பாண்டிநாடு என்னும் பெயரைக் கேட்ட அளவானே, அடிகள் பேரன்பால் மனங் கசியப் பெற்றாராய் அப் பெரியவர்பாற் பின்னும் அன்பு மீதூர்ந்து சிலசொற் சொல்லியபின், 'தேவரீர் இங்குவந் தருளியது எதன் பொருட்டு?' என்று வினாயினார். அதற்கு அவர், 'அடிகளே! நும்மைத் திருப்பெருந்துறையின்கண் ஆட்கொண்டருளிய சிவபிரான் ஆணையாலே நும்மைக் காண்டற் பொருட்டே வந்தனம். தேவர்களாலுங் காண்டற் கேலாத பெருமானைக் குதிரைமேல் ஏற்றுவித்த நுமது பெருமையாலே பாண்டிநாடு வாழ்ந்தது. திருப்பெருந்துறைக்கு நீர் மீண்டும்போய் ஆண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/234&oldid=1587681" இலிருந்து மீள்விக்கப்பட்டது