உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

  • மறைமலையம் - 22

ஐயனை வழிபட்டபின், திருக்கழுக்குன்றஞ் சென்று வணங்கி, அதன்பின் இப் பொன்னம்பலம் அடைந்து புத்தரை வழக்கில் வென்றீர் என்னுஞ் சொற்கேட்டுப் பாண்டி நாட்டவ ரெல்லாரும் பெரு மகிழ்ச்சிகொண்டார். முழுமுதற் பெரும் பாருளாகிய சிவபிரான் மீது நீவிர் அன்பினாற் பாடின செந்தமிழ்ப்பாடல்கள் அத்துணையும் ஓதுவீரானால் அவற்றை எழுதிக்கொண்டு பாராயணஞ்செய்வேம்' என்று சொல்லக் கேட்டு, அடிகளும் தாம் பாடியவைகளையெல்லாம் விளம்ப, அப் பெரியவர் அவற்றை முற்றும் விடாமல் ஏட்டிலே தெளிவு பெற எழுதிக்கொண்டார். இங்ஙனந் திருவாசகச் செந்தமிழ்ப் பாடல்கள் எழுதி முடிந்தபின், ‘அம்பலத்தாடும் அம்மை யப்பரைப் பாட்டுடைத் தலைவராக வைத்து ஒரு கோவையும் பாடியருளல் வேண்டும்' என்று அப்பெரியவர் கேட்பப் பண்டைச் செந்தமிழ் அகப்பொருட்டுறை வளனெல்லாம் ஒருங்கு பொதிந்தூறத் ‘திருச்சிற்றம்பலக்கோவையார்' என்னும் அரும்பெறல் நூலையும் அடிகள் இயற்றிச் சொல்லியருளினார். அவ் வருந்தமிழ்க்கோவை நானூறு பாடல்களையும் ஏட்டில் தெளித்தெழுதிக் கொண்டபின்னர், அவ் வேட்டைச் செவ்வை யாக எடுத்துக் கட்டிக்கொண்டு, அப் பெரியவர் மின்னொளி போற் சடுதியில் மறைந்து போயினார். அங்ஙனம் அவர் மறைந்தமை கண்ட அடிகள் எழுந்தோடி அவரை இங்குமங்குந் தேடியுங் கண்டிலாமையின், வந்த அப் பெரியவர் சிவபிரானே யெனத் தெரிந்து கண்ணீர் மாலைமாலையாய் ஒழுகக் குழைந் தழுது ‘எங்கே, சென்றனை எம்பெருமானே!' என மண்மேற் செயலற்று வீழ்ந்து பேரின்ப வெள்ளத்தில் அமிழ்ந்திக் கிடந்தார்.

6

ஈதிங்ஙனமாக, மற்றைநாட் காலையிற் கோயில் வழிபாடு ஆற்றுவார் பொன்னம்பலத் திருக்கதவந் தாழ்நீக்கித் திறந்த அளவிலே, அதன் வாயிற்படியின்மேல் ஓர் ஏட்டுச் சுவடி யிருக்கக்கண்டு, ‘ஈது ஒரு பெரும்புதுமை! இச்சுவடி இங்கு வந்தமை தெய்வத்தான் நேர்ந்ததாகல் வேண்டும். இதனை இத்தில்லை நகரின் உள்ளார்க்கெல்லாம் அறிவித்து

L

அவரெல்லாம் வந்து கண்ட பின்னரே, இதனை யின்னதென்று இதனையின்ன எல்லார் முன்னிலையிலும் எடுத்துப்பார்த்தல் வேண்டும்’ என்று உறுதிசெய்து, அங்ஙனமே அவ்வூரிலுள்ளார்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/235&oldid=1587682" இலிருந்து மீள்விக்கப்பட்டது