உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

1

203

கல்லாம் அவ்வியப்பினைத் தெரிவிக்க, அவ் வூரின்கண் இருந்த சான்றோரெல்லாம் அப்பொன்னம்பலத்தே வந்துகூடி, அவ் வேட்டுச்சுவடி உள்ளே படியின் மீது வைக்கப் பட்டிருத் தலைக் கண்டு, 'எம்பெருமான் எழுந்தருளும் இம்மன்றின்கண் தேவரும் புகார்; அங்ஙனமாகவும் இச் சுவடி இதன்கண் வந்தது தெய்வத்தின் அருளாலே யாதல்வேண்டும்' என்று வியந்து, அதனை இன்னதென எடுத்து அவிழ்த்துப் பார்த்தலே செயற்பாலதென எல்லாரும் ஒருமித்துக் கூறினார். கூற, ஒருவர் அவ்வாறே சென்று அச்சுவடிமேல் மலர்தூவி வணங்கி, அதனை யெடுத்துக்கொண்டு புறம்போந்து அவிழ்த்துநோக்க முதற்கண் ‘நமச்சிவாய வாஅழ்க' என்று தொடங்குங் கலி வெண்பாவி லிருந்து, ஈற்றில் “அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே” என்று முடியும் திருவாசகச் செழுந் தமிழ்மறை அறுநூற்றைம்பத்தாறு செய்யுட்களும், அவற்றின் பின் திருச்சிற்றம்பலக் கோவையார் நானூறு செய்யுட்களும் எழுதப்பட்டு இருக்கவும், அக் கோவையாரின் முடிவிடத்தே, இவை திருவாதவூரன்பாட, அழகிய திருச்சிற்றம்பல முடையான் எழுதியவை,” என்று குறிக்கப்பட்டிருக்கவுங் கண்டு, எல்லாரும் நெஞ்சம் நீராய்க்கரைந்து உடம்பெங்கும் மயிர்க்கூச் செறிந்து குறுவியர் பொடிப்பக், கண்களில் நீர்வார அன்பால் இன்புற்றுப் பெருந்தவமுடைய மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்த இத் தமிழ்மறையை யல்லாமல் வீட்டினை எய்துவிக்கும் நூல் வேறொன்றுமில்லை' என்று புகன்றார்கள் புகன்று. இந் நூற்பொருளை அடிகளே திருவாய்மலர்ந்தருள அதனை எஞ்செவியான் மாந்துவேமாக என எல்லாரும் ஒருப்பட்டு, அடிகளுழைச் சென்றார்கள்.

66

6

சென்று, அடிகளின் திருவடிமிசை வீழ்ந்து இறைஞ்சித் தாங் கொணர்ந்த அத் திருமுறையினையும் அவர் திருமுன்பு வைத்து எல்லாம்வல்ல முதல்வன் செய்த திறமெல்லாம் இயம்பினார்கள். அச் சொற்கேட்ட அடிகள் ‘என் புல்லிய பாடலையும் எம்பெருமான் இங்ஙனந் திருவுள முவந்து பாராட்டுதற்கு அடியேன் இயற்றிய தவம் யாது கொல்!' எனக் கூறி அகம்உருகி அழுதிட்டார். அப்போது அங்கு நின்ற சான்றோரெல்லாம் பெருமானே! சிவபெருமானே தேவரீர் பால் இசைச்சுவை மிக்க இப்பேரன்பின் பாடலைக் கொண்ட

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/236&oldid=1587683" இலிருந்து மீள்விக்கப்பட்டது