உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

மறைமலையம்

22

வாற்றினை அடியேங்கட்கு நவின்றருளல் வேண்டுமென இரப்ப, இறைவன் ஒரு பெரியவர் வடிவிற் போந்து தம்பானின்றும் அவற்றைப் பெற்று எழுதிக் கொண்டு மறைந்த திறனெல்லாம் மொழிந்துருகினார். அவையெல்லாங் கேட்ட அச்சான்றோர் வியப்பும் களிப்பும் மிக்கெய்தித் ‘தில்லையில் எம்பெருமானைச் செப்பிய இத் தமிழ் மாலையிற் பொதிந்த நல்ல அரும் பொருளை அடியேங்கள் கேட்டு உய்யுமாறு தேவரீரே நலக்கவுரை நிகழ்த்தருளல் வேண்டு' மெனக் குறை நவின்றார்கள். அவ் வேண்டுகோளுக்கு அடிகளும் மகிழ்வுடன் இசைந்து 'பொன்னம்பலத்தின் எதிரே போயிருந்து அதன் பொருள் புகல்வேம்' எனப் பகர்ந்து கோயில் நோக்கிச் சென்றார்; அங்குக் குழுமிய சான்றோரும் அவர் பின்னே திருக்கோயிலுக்கு ஏகினர்.

ஏகி, எல்லாருமாய்ச் செம்பொன்னம்பலத்தே திரண்டு நிற்க. மாணிக்கவாசகப் பெருமான் ‘இத் தமிழ்மாலைக்குப் பொருள் இவரே!' என அம்பலக் கூத்தனைச் சுட்டிக் காட்டியவாறே மன்றினுட் புக்கு ஆண்டெழுந்த சிவ அருட் பேரொளியிற் கலந்து மறைந்தருளினார். அவ் வருட்பெருங் காட்சியினைக் கண்டு ஆண்டுநின்ற பெருந்தவமுடையா ரெல்லாம் கண்ணீருங் கம்பலையும் உடையராய்ச் சென்னிமேற் கைகூப்பித் தொழுது அன்பிற் றேக்கினார். அன்று தொட்டுத் தமிழ்நாட்டின்கண் உள்ளாரெல்லாரும் திருவாசகந், திருக்கோவையாராம் திருமறைத் தமிழ் ஓதியுய்யும் பெறற்கரும்பேறு பெற்றாரென்பது. ஓம் சிவம்.

மாணிக்கவாசகர் வரலாறு முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/237&oldid=1587684" இலிருந்து மீள்விக்கப்பட்டது