உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207

1. வாசகன் என்னும் சொல் அடிகளையே உணர்த்தும்

இருபத்திரண்டு

ஆண்டுகட்குமுன்

ல்

இற்றைக்கு மாணிக்கவாசகப் பெருமானது காலவரையறையைப் பற்றிப் பிழைபட எழுதிவிட்டவர் தம் கொள்கைகளை யெல்லாம் தக்க சான்றுகளுடன் மறுத்து அப்பெருமான் நிலவிய காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டாதலை வலி யுறுத்திக் காட்டி, அங்ஙனங் காட்டிய எமது கட்டுரையைக் கி.பி.1902-இல் வெளிப்போந்த எமது ஞானசாகர முதற்பதுமத்தின் இதழ்களில் வெளியிட் டேம். பின்னர் அதுதன்னையே ஆங்கிலம் உணர்ந்தாரும் அறிந்து கொள்ளல்வேண்டி ஆங்கிலத்தில் எழுதி, 1904 இ வெளியான சென்னைக் கிறித்துவக் கல்லூரிப் பத்திரிகையிலும் வளியிடுவித்தேம். அதற்குப்பின் திருக் கோபிநாதராவ் என்னும் ஆங்கிலம் வல்ல அறிஞர் ஒருவர் மாணிக்க வாசகப் பெருான் காலத்தைப் பற்றிப் பிழைபாடானவைகளை எழுதினாராகலின், அவரெழுதியவைகளை மறுத்து 1908இல் வெளியான எமது ஞானசாகர நான்காம் பதுமத்தில் மற்றொரு கட்டுரை எழுதி வெளியிட்டேம். அதற்குப்பின் இதுகாறும் வேறுஞ் சிலர் அடிகளது காலத்தைப் பிழைபட்ட கொள்கைகளால் ஒன்பதாம் நூற்றாண்டின் கண்ணதாகக் கூறுகின்றனர். இங்ஙனங் கூறுவாருள் முன்நிற்பவர் ‘தமிழ் ஆராய்ச்சிகள்” என்னும் நூலை ஆங்கிலத்தில் இயற்றிய திரு. எம். சீநிவாச ஐயங்கார் அவர்களே யாவர். இவரைப் பின்பற்றியே ‘தமிழ் வரலாறு' (1922) என்னும் நூலை எழுதினோருங் கூறிச் செல்வதால் இவ்விருவர் கூற்றுக்களையும் ஆராய்ந்து மறுத்து, அடிகள் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டே யாதல் மீண்டும் வலியுறுத்துவாம்.

.

வ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/240&oldid=1587687" இலிருந்து மீள்விக்கப்பட்டது