உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

  • மறைமலையம் - 22

வாராய்ச்சி அடிகளின் வரலாறு நிகழ்ந்த முறையே வைத்து ஆராயப்படும்.

மாணிக்கவாசகர் இந் நிலவுலகத்திற் பிறந்தருளுதற்கு முன்னர்ச் சிவபிரானுக்கு அணுக்கராய் அவர்பாலிருந்தனர் என்பதும், பின்னர் அவரது கட்டளையால் மக்கட் பிறவியில் வரலாயினார் என்பதும் அடிகள்தாம் அருளிச்செய்த திருவாசகத்தில் தாமே கூறியிருக்கின்றனர். அது.

66

“நீக்கி முன்எனத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து” என அதிசயப்பத்து 8 ஆம் செய்யுளிற் போந்த

66

அடியால் அறியப்படும். அதன்பொருள்: முன்னே

சிவபிரானாகிய தன்னோடு அணுக்கமாநின்ற என்னைப் பின்னொருகால் அங்ஙனம் நில்லாதபடி தன்னினின்றும் நீக்கி இவ் வுடம்பாகிய குடிலினுட் புகுமாறு புகுத்தி” என்பதாம். எனவே, சிவபிரான் மாட்டு அணுக்கராயிருந்த அடியார் ஒருவரே அங்ஙனம் மாணிக்கவாசகராகப் பிறந்தருளினா ரென்பது தேற்றமாம். மேலுலகத்திற் சிவபிரான் மாட்டு அணுக்கராய் நிற்குந் தூய தொண்டர்கள் 'சிவகணங்கள்’ என்று வழங்கப்படுவர். அச் சிவகணங்களுள் தலைவராய் நிற்குஞ் சிலர்க்கு ‘நந்திகள்' என்னும் பெயர் உண்மை.

‘நந்தி யருள்பெற்ற நாதரை நாடிடில் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர் என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே.

என்னுந் திருமந்திரத்தில் திருமூல நாயனார் நந்திகள் நால்வரென அருளிச்செய்தவாற்றால் நன்கு விளங்கும். அங்ஙனஞ் சிவகணங்களுள் தலைவராய் நின்ற நந்திகளுள் ஒருவரே மாணிக்கவாசகராக இந் நிலவுலகிற் பிறந்தருளினர். அவ் வுண்மைகண்டே மாணிக்கவாசகர்க்குப் பின் வந்த திருநாவுக்கரசு நாயனார்.

"குராமலரோடு அராமதியஞ் சடைமேற் கொண்டார் குடமுழ நந்தீசனை வாசகனாக் கொண்டார்”3

என்று அருளிச் செய்தனர். அற்றேல், நம்பியார் திருவிளையாடல், திருவுத்தரகோசமங்கைப் புராணம், கடம்பவன புராணம் முதலிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/241&oldid=1587688" இலிருந்து மீள்விக்கப்பட்டது